• Aug 08 2025

சீனாவின் ஜெங்சோவில் கடும் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் தத்தளிக்கும் வாகனங்கள்!

shanuja / Aug 8th 2025, 2:10 pm
image

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்சோவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  


ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்சோவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. 


குறித்த பகுதியில் ஏற்பட்ட கனமழையால்  திடீரென  கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


வெள்ளப்பெருக்கையடுத்து அங்குள்ள வீடுகள், சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 


சாலையில் திடீரென வெள்ளம் அலைமோதியதையடுத்து சாலையில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 


சில வாகனங்கள் சாலையை விட்டு நகரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன்  சாலையை மூடிய வெள்ளத்தில் பல மக்களும் சிக்கிக் கொண்டுள்ளனர். 


வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 


வெள்ளத்தில் வாகனங்களுடன் மக்கள் தத்தளிக்கும் காட்சி காணொளியாக வெளிவந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜெங்சோவில் கடும் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் தத்தளிக்கும் வாகனங்கள் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்சோவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜெங்சோவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. குறித்த பகுதியில் ஏற்பட்ட கனமழையால்  திடீரென  கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வெள்ளப்பெருக்கையடுத்து அங்குள்ள வீடுகள், சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலையில் திடீரென வெள்ளம் அலைமோதியதையடுத்து சாலையில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில வாகனங்கள் சாலையை விட்டு நகரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன்  சாலையை மூடிய வெள்ளத்தில் பல மக்களும் சிக்கிக் கொண்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் வாகனங்களுடன் மக்கள் தத்தளிக்கும் காட்சி காணொளியாக வெளிவந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement