• Nov 24 2024

சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் இன்றுடன் நிறைவு...!

Sharmi / May 24th 2024, 1:51 pm
image

சிவனொளிபாத மலை பருவகாலம் இன்று மதியத்துடன் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், சிவனொளிபாத மலை  உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் தெய்வ ஆபரணங்கள் பூஜை பொருட்கள் அனைத்தும் இரத்தினபுரி பலாபத்த வழியாகவும், நோட்டன் வழியாகவும், பொகவந்தலாவ வழியாகவும் இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹாவிகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஆரம்பமான சிவனொளிபாத மலை பருவகாலம் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிறைவுக்கு வந்துள்ளது.

அதேவேளை 2024/2025 ஆம் ஆண்டு சிவனடி பாத மலை பருவகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும்.

இந்நிலையில், இன்றைய தினம் சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து சுவாமிகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் லக்சபான இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் உதவியுடன் மலை அடிவாரத்தில் உள்ள பௌத்த மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து மக்களும் தரிசனம் செய்ய பின்னர் வாகன தொடரணியாக இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹாவிகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் இன்றுடன் நிறைவு. சிவனொளிபாத மலை பருவகாலம் இன்று மதியத்துடன் நிறைவு பெற்றுள்ளது.இந்நிலையில், சிவனொளிபாத மலை  உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் தெய்வ ஆபரணங்கள் பூஜை பொருட்கள் அனைத்தும் இரத்தினபுரி பலாபத்த வழியாகவும், நோட்டன் வழியாகவும், பொகவந்தலாவ வழியாகவும் இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹாவிகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஆரம்பமான சிவனொளிபாத மலை பருவகாலம் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிறைவுக்கு வந்துள்ளது.அதேவேளை 2024/2025 ஆம் ஆண்டு சிவனடி பாத மலை பருவகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும்.இந்நிலையில், இன்றைய தினம் சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து சுவாமிகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் லக்சபான இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் உதவியுடன் மலை அடிவாரத்தில் உள்ள பௌத்த மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து மக்களும் தரிசனம் செய்ய பின்னர் வாகன தொடரணியாக இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹாவிகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement