• May 19 2024

இலங்கையில் கேக் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சிச் செய்தி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை! samugammedia

Chithra / Mar 27th 2023, 10:58 pm
image

Advertisement

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்,

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.


இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இறக்குமதி மூலம் சுங்கம் ஏற்றுமதி - இறக்குமதி சட்டத்தை மீறியுள்ளது.


எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று முட்டைகளின் நிலையை பரீட்சிக்கவேண்டும் என்றும் அசேல சம்பத் கோரியுள்ளார்

இலங்கையில் கேக் பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சிச் செய்தி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை samugammedia இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்,கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த இறக்குமதி மூலம் சுங்கம் ஏற்றுமதி - இறக்குமதி சட்டத்தை மீறியுள்ளது.எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று முட்டைகளின் நிலையை பரீட்சிக்கவேண்டும் என்றும் அசேல சம்பத் கோரியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement