• Apr 13 2025

சட்ட விரோத குடியேற்றங்களை கண்டறிய தீவிர சோதனை…சீக்கியர்கள் கண்டனம்

Tharmini / Jan 28th 2025, 10:04 am
image

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றக் கொண்டதன் பின்னர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் குடியேறியவர்கள், எந்தவொரு ஆவணங்களும் இன்றி தங்கியிருப்பர்கள், விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 600 இற்கும் அதிகமானோர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நியூயோர்க், நியூ ஜெர்ஸி ஆகிய நகரங்களில் நேற்று திங்கட்கிழமை திடீரென பொலிஸார் மற்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

குருத்வராக்களில் யாரேனும் சட்ட விரோதமாக தங்கியிருக்கிறார்களா? குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கின்றனரா? போன்ற விபரங்களையும் சேகரித்து வருகின்றனர். கத்தோலிக்க திருச்சபைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவர்களின் சொந்த நாடுகளில் கொலை, பாலியல் குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டுவிட்டு அமெரிக்காவுக்கு வந்திருந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி யாரும் ஒளிந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சோதனைகளுக்கு அமெரிக்க வாழ் சீக்கியர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

குருத்வராக்களை இவ்வாறு கண்காணிப்பது சீக்கியர் மத நம்பிக்கையின்படி ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவ் அமைப்பு கூறிவருகிறது.

சட்ட விரோத குடியேற்றங்களை கண்டறிய தீவிர சோதனை…சீக்கியர்கள் கண்டனம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றக் கொண்டதன் பின்னர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் குடியேறியவர்கள், எந்தவொரு ஆவணங்களும் இன்றி தங்கியிருப்பர்கள், விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 600 இற்கும் அதிகமானோர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நியூயோர்க், நியூ ஜெர்ஸி ஆகிய நகரங்களில் நேற்று திங்கட்கிழமை திடீரென பொலிஸார் மற்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.குருத்வராக்களில் யாரேனும் சட்ட விரோதமாக தங்கியிருக்கிறார்களா குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கின்றனரா போன்ற விபரங்களையும் சேகரித்து வருகின்றனர். கத்தோலிக்க திருச்சபைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அவர்களின் சொந்த நாடுகளில் கொலை, பாலியல் குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டுவிட்டு அமெரிக்காவுக்கு வந்திருந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி யாரும் ஒளிந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இந்த சோதனைகளுக்கு அமெரிக்க வாழ் சீக்கியர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.குருத்வராக்களை இவ்வாறு கண்காணிப்பது சீக்கியர் மத நம்பிக்கையின்படி ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவ் அமைப்பு கூறிவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement