• May 19 2024

பிரபாகரன் விடயத்தில் பொய் கூறும் சிங்கள அரசு, இராணுவம்! - மீண்டும் சாடுகிறார் பழ.நெடுமாறன் SamugamMedia

Chithra / Feb 19th 2023, 11:39 am
image

Advertisement

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று சிங்கள அரசும் இராணுவமும் தொடர்ச்சியாக பொய் கூறுவதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.

மரபணு பரிசோதனை வசதியே அற்ற நாடான இலங்கையில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் எவ்வாறு பரிசோதனை அறிக்கையை பெற முடிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபாகரன் நலமாக இருக்கின்றார் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அச்செவ்வியில் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

கேள்வி: பிரபாகரன் உயிருடன் உள்ளாரா?

பதில்: ஆம், அவர் நலமாக உள்ளார்.

கேள்வி: அதற்கான ஆதாரம் என்ன?

பதில்: 2009இல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. இலங்கை இராணுவம் இவ்வாறு அறிவிப்பது முதல் தடவையல்ல. 1984ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் சிங்கள அரசும் இராணுவமும் அறிவித்திருக்கின்றார்கள். அவர்கள் எதற்காக இவ்வாறான அறிவிப்பை தொடர்ந்தும் செய்கின்றார்கள் என்பது தான் இங்கு முக்கியமான விடயமாகிறது. 

உலகம் முழுவதும் இருக்கின்ற ஈழத் தமிழர்கள், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் மன உறுதியை தகர்க்க வேண்டும், அவர்களை அச்சமடையச் செய்ய வேண்டும், தங்களுக்கு அவர்களின் எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பொய்ச் செய்தியை சிங்கள அரசும் இராணுவமும் தொடர்ந்து பரப்பிவருகின்றனர்.

கேள்வி: இலங்கை இராணுவம் மரபணு பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பதாகவும் பிரபாகரன் உயிருடன் இல்லையென்றும் அறிவித்திருக்கின்றதல்லவா?

பதில்: இந்தியாவில் உள்ள தடயவியல் அறிஞர்களில் மிக முக்கியமானவர் வைத்தியர் சந்திரசேகரன். சென்னை தடயவியல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை நாங்கள் கண்டெடுத்தோம் என்று 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது. 11.30 மணிக்கு டி.என்.ஏ. சோதனை செய்துவிட்டோம். அது பிரபாகரனின் உடல் தான் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறான அறிவிப்பை வெளியிட்டது சாதாரணமான ஆள் அல்ல. 

அப்போது இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தான் அறிவித்திருந்தார். அப்போதே வைத்தியர் சந்திரசேகர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்.

டி.என்.ஏ. சோதனை என்பது ஒரு  மணித்தியாலத்தில் செய்யக்கூடியதல்ல. அதனை செய்வதற்கு நான்கு நாட்கள் ஆகும். அந்த பரிசோதனைக்கு சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரின் இரத்தம் தேவைப்பட்டிருக்கும். அத்துடன், டி.என்.ஏ. பரிசோதனை செய்வதற்கான வசதி கூட இலங்கையில் இல்லை. இலங்கையின் பரிசோதனைகள் சென்னையில் தான் நடைபெறுகின்றன. இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இலங்கை இராணுவம், அரசாங்கம் பொய் கூறுகிறார்கள் என்பது இதில் இருந்து தெளிவாகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரை சேர்த்திருக்கின்றார்கள். 

ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், மரணச் சான்றிதழ் கொடுத்து அவரின் பெயரை நீக்கிவிடுவார்கள். இலங்கை அரசு பிரபாகரனை கொன்றுவிட்டோம், அவரது உடலை காட்டிவிட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். ஏன் மரணச்சான்றிதழ் கொடுக்கவில்லை, ஏன் குற்றப் பத்திரிகையில் அவரது பெயர் இருக்கின்றது.

இந்திய அரசாங்கம் அமைத்த விசாரணை குழு இன்னமும் அதனை விசாரித்துக்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் என்ன நாடகம். அந்த வகையில், இலங்கை அரசும் பிரபாகரன் இறந்ததை நம்பவில்லை. இந்திய அரசும் பிரபாகரன் இறந்ததை நம்பவில்லை என்று தான் தோன்றுகின்றது. அதற்காகத்தான் அவர் இறந்துவிட்டது போன்று பொய் கூறுகிறார்கள். அப்படித்தானே இருக்க வேண்டும்.

கேள்வி: பிரபாகரனின் அனுமதியை பெற்றா ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினீர்கள்?

பதில்: இல்லை, நான் அவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளேன். அவர்களின் அனுமதியைப் பெற்றிருந்தேன்.

கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் நீங்கள் அவரை நேரில் பார்த்தீர்களா? தொலைபேசியில் உரையாடினீர்களா? ஒரு புகைப்படத்தினையோ அல்லது காணொளியையோ அவர் ஏன் வெளியிடவில்லை?

பதில்: நான் அவரை நேரில் பார்க்கவில்லை. உரையாடவில்லை. தற்போதுள்ள நவீன யுகத்தில் நான் அவருடன் தொலைபேசியில் உரையாடினாலோ அல்லது காணொளியை புகைப்படத்தினை வெளியிட்டாலோ அவர் இருக்கும் இடத்தினை கண்டறிந்துவிடலாம். அது ஆபத்தானது.

கேள்வி: அப்படியென்றால் இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரன் தப்பித்துச் சென்றுவிட்டாரா?

பதில்: அவர் நலமாக இருக்கின்றார். அவ்வளவு தான் கூறமுடியும்.

கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நீங்கள் வெளியிட்ட கருத்தால் ராஜபக்ஷக்கள் மீண்டும் அரசியல் ரீதியாக பலமடைவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுமல்லவா?

பதில்: ராஜபக்ஷக்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களை சிங்கள மக்களே விரட்டியடித்துவிட்டார்கள். இப்போது அங்குள்ள பிரச்சினை சீனா ஆழமாக காலூன்றிவிட்டது. இலங்கையில் சீனா காலூன்றி இருப்பது இந்தியாவுக்கே பிரச்சினை. ஆகவே ஈழத்தமிழர் பிரச்சினை வேறு; இந்தியாவின் பிரச்சினை வேறு என்று இரண்டாக பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட விடயமாகும். ஆகவே, இந்தியா இந்த விடயத்தில் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.

கேள்வி: பிரபாகரன் மீண்டும் வருவதாக இருந்தால் இலங்கை, இந்திய நாடுகளை விட வேறு நாடுகளும் உற்றுநோக்குமா?

பதில்: அவர் வருகின்றபோது எந்த நாடுகள் எப்படி சிந்திக்கின்றன என்பது விடயமல்ல. அவர் மீண்டும் வருவது தமிழ் மக்களின் மீட்சிக்காக. ஆகவே அவருக்கு ஆதரவாக அனைத்து நாடுகளும் இருக்க வேண்டும் என்பது எம் அனைவரினதும் கோரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

பிரபாகரன் விடயத்தில் பொய் கூறும் சிங்கள அரசு, இராணுவம் - மீண்டும் சாடுகிறார் பழ.நெடுமாறன் SamugamMedia தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று சிங்கள அரசும் இராணுவமும் தொடர்ச்சியாக பொய் கூறுவதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.மரபணு பரிசோதனை வசதியே அற்ற நாடான இலங்கையில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் எவ்வாறு பரிசோதனை அறிக்கையை பெற முடிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபாகரன் நலமாக இருக்கின்றார் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியில் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:கேள்வி: பிரபாகரன் உயிருடன் உள்ளாராபதில்: ஆம், அவர் நலமாக உள்ளார்.கேள்வி: அதற்கான ஆதாரம் என்னபதில்: 2009இல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. இலங்கை இராணுவம் இவ்வாறு அறிவிப்பது முதல் தடவையல்ல. 1984ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் சிங்கள அரசும் இராணுவமும் அறிவித்திருக்கின்றார்கள். அவர்கள் எதற்காக இவ்வாறான அறிவிப்பை தொடர்ந்தும் செய்கின்றார்கள் என்பது தான் இங்கு முக்கியமான விடயமாகிறது. உலகம் முழுவதும் இருக்கின்ற ஈழத் தமிழர்கள், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் மன உறுதியை தகர்க்க வேண்டும், அவர்களை அச்சமடையச் செய்ய வேண்டும், தங்களுக்கு அவர்களின் எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பொய்ச் செய்தியை சிங்கள அரசும் இராணுவமும் தொடர்ந்து பரப்பிவருகின்றனர்.கேள்வி: இலங்கை இராணுவம் மரபணு பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பதாகவும் பிரபாகரன் உயிருடன் இல்லையென்றும் அறிவித்திருக்கின்றதல்லவாபதில்: இந்தியாவில் உள்ள தடயவியல் அறிஞர்களில் மிக முக்கியமானவர் வைத்தியர் சந்திரசேகரன். சென்னை தடயவியல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை நாங்கள் கண்டெடுத்தோம் என்று 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது. 11.30 மணிக்கு டி.என்.ஏ. சோதனை செய்துவிட்டோம். அது பிரபாகரனின் உடல் தான் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறான அறிவிப்பை வெளியிட்டது சாதாரணமான ஆள் அல்ல. அப்போது இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தான் அறிவித்திருந்தார். அப்போதே வைத்தியர் சந்திரசேகர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார்.டி.என்.ஏ. சோதனை என்பது ஒரு  மணித்தியாலத்தில் செய்யக்கூடியதல்ல. அதனை செய்வதற்கு நான்கு நாட்கள் ஆகும். அந்த பரிசோதனைக்கு சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரின் இரத்தம் தேவைப்பட்டிருக்கும். அத்துடன், டி.என்.ஏ. பரிசோதனை செய்வதற்கான வசதி கூட இலங்கையில் இல்லை. இலங்கையின் பரிசோதனைகள் சென்னையில் தான் நடைபெறுகின்றன. இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இலங்கை இராணுவம், அரசாங்கம் பொய் கூறுகிறார்கள் என்பது இதில் இருந்து தெளிவாகிறது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரை சேர்த்திருக்கின்றார்கள். ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், மரணச் சான்றிதழ் கொடுத்து அவரின் பெயரை நீக்கிவிடுவார்கள். இலங்கை அரசு பிரபாகரனை கொன்றுவிட்டோம், அவரது உடலை காட்டிவிட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். ஏன் மரணச்சான்றிதழ் கொடுக்கவில்லை, ஏன் குற்றப் பத்திரிகையில் அவரது பெயர் இருக்கின்றது.இந்திய அரசாங்கம் அமைத்த விசாரணை குழு இன்னமும் அதனை விசாரித்துக்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் என்ன நாடகம். அந்த வகையில், இலங்கை அரசும் பிரபாகரன் இறந்ததை நம்பவில்லை. இந்திய அரசும் பிரபாகரன் இறந்ததை நம்பவில்லை என்று தான் தோன்றுகின்றது. அதற்காகத்தான் அவர் இறந்துவிட்டது போன்று பொய் கூறுகிறார்கள். அப்படித்தானே இருக்க வேண்டும்.கேள்வி: பிரபாகரனின் அனுமதியை பெற்றா ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினீர்கள்பதில்: இல்லை, நான் அவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளேன். அவர்களின் அனுமதியைப் பெற்றிருந்தேன்.கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் நீங்கள் அவரை நேரில் பார்த்தீர்களா தொலைபேசியில் உரையாடினீர்களா ஒரு புகைப்படத்தினையோ அல்லது காணொளியையோ அவர் ஏன் வெளியிடவில்லைபதில்: நான் அவரை நேரில் பார்க்கவில்லை. உரையாடவில்லை. தற்போதுள்ள நவீன யுகத்தில் நான் அவருடன் தொலைபேசியில் உரையாடினாலோ அல்லது காணொளியை புகைப்படத்தினை வெளியிட்டாலோ அவர் இருக்கும் இடத்தினை கண்டறிந்துவிடலாம். அது ஆபத்தானது.கேள்வி: அப்படியென்றால் இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரன் தப்பித்துச் சென்றுவிட்டாராபதில்: அவர் நலமாக இருக்கின்றார். அவ்வளவு தான் கூறமுடியும்.கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நீங்கள் வெளியிட்ட கருத்தால் ராஜபக்ஷக்கள் மீண்டும் அரசியல் ரீதியாக பலமடைவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுமல்லவாபதில்: ராஜபக்ஷக்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களை சிங்கள மக்களே விரட்டியடித்துவிட்டார்கள். இப்போது அங்குள்ள பிரச்சினை சீனா ஆழமாக காலூன்றிவிட்டது. இலங்கையில் சீனா காலூன்றி இருப்பது இந்தியாவுக்கே பிரச்சினை. ஆகவே ஈழத்தமிழர் பிரச்சினை வேறு; இந்தியாவின் பிரச்சினை வேறு என்று இரண்டாக பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட விடயமாகும். ஆகவே, இந்தியா இந்த விடயத்தில் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.கேள்வி: பிரபாகரன் மீண்டும் வருவதாக இருந்தால் இலங்கை, இந்திய நாடுகளை விட வேறு நாடுகளும் உற்றுநோக்குமாபதில்: அவர் வருகின்றபோது எந்த நாடுகள் எப்படி சிந்திக்கின்றன என்பது விடயமல்ல. அவர் மீண்டும் வருவது தமிழ் மக்களின் மீட்சிக்காக. ஆகவே அவருக்கு ஆதரவாக அனைத்து நாடுகளும் இருக்க வேண்டும் என்பது எம் அனைவரினதும் கோரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement