ரஜினியாக மாறிய சிவகார்த்திகேயன்; இணையத்தில் வைரலாகும் படங்கள்!

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்து பட்டையை கிளப்பினார்.

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதற்கு பிற்கு பல படங்கள் ஹிட் கொடுத்த இவர் நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்யார் சிவகார்த்திகேயன்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த இவர் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த டாக்டர், டான் இரண்டுமே மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ப்ரின்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதை தொடர்ந்து மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடிக்கின்றார்.

இதற்கான முன்னோட்டம் நேற்று வெளிவந்ததும் இந்த முன்னோட்டத்தில் சிவகார்த்திகேயன் அச்சு அசல் 80ஸ் ரஜினி போலவே மாறிதாக பல ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை