• Sep 22 2024

உரும்பிராய் றோ.க.த.க பாடசாலையில் திறன் வகுப்பறை செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு!

Sharmi / Jan 26th 2023, 10:24 am
image

Advertisement

உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் - கனடா, ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இரட்ணம் பவுண்டேசன், lMHO ஆகிய நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பில் யா/உரும்பிராய் றோ.க.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நேற்றையதினம்(25) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர்  ஜே.மகிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  விருந்தினர்களாக  உரும்பிராய் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் பொறியியலாளருமான  செல்வன் செல்வதுரை  உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாமணி வே.கணேசவேல், யாழ்கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் ச.சிவகுமார் ,காந்திஜி சனசமூக நிலைய தலைவர் தே.றமணதாசனும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவ மாணவிகள் திறன் பலகையில் தமது பாடங்களில் செயற்பட்ட விதம் நிகழ்வில் பங்கேற்றவர்களை ஈர்த்தது. ஏற்கனவே இரட்ணம் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் பயிற்சி வழங்கப்பட ஆசிரியரின் வழிகாட்டலில் ஆசிரியர் ஒருவரும்

திறன் பலகையை தம் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்நிகழ்வில் செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.

உதவியளித்திருந்த அமைப்புக்களுக்கு அதிபர் உட்பட விருந்தினர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் திறன் பலகையை கற்றல் கற்பித்தலுக்கு செயற்படுத்துவது தொடர்பான உபாயங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் மாணவர்கள் தமது புலக்காட்சித்திறன் ஊடாக எவ்வாறு திறன் பலகையை கையாண்டு சிறப்பாக கற்றல் பேறுகளை அடையலாம் என்பது பற்றிய அறிவுரைகளும் விருந்தினர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.




உரும்பிராய் றோ.க.த.க பாடசாலையில் திறன் வகுப்பறை செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் - கனடா, ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இரட்ணம் பவுண்டேசன், lMHO ஆகிய நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பில் யா/உரும்பிராய் றோ.க.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நேற்றையதினம்(25) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.பாடசாலை அதிபர்  ஜே.மகிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  விருந்தினர்களாக  உரும்பிராய் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் பொறியியலாளருமான  செல்வன் செல்வதுரை  உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாமணி வே.கணேசவேல், யாழ்கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் ச.சிவகுமார் ,காந்திஜி சனசமூக நிலைய தலைவர் தே.றமணதாசனும் கலந்து சிறப்பித்தனர்.மாணவ மாணவிகள் திறன் பலகையில் தமது பாடங்களில் செயற்பட்ட விதம் நிகழ்வில் பங்கேற்றவர்களை ஈர்த்தது. ஏற்கனவே இரட்ணம் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் பயிற்சி வழங்கப்பட ஆசிரியரின் வழிகாட்டலில் ஆசிரியர் ஒருவரும்திறன் பலகையை தம் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்நிகழ்வில் செய்து காட்டியமை குறிப்பிடத்தக்கது.உதவியளித்திருந்த அமைப்புக்களுக்கு அதிபர் உட்பட விருந்தினர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் திறன் பலகையை கற்றல் கற்பித்தலுக்கு செயற்படுத்துவது தொடர்பான உபாயங்களும் வழங்கப்பட்டன.அத்துடன் மாணவர்கள் தமது புலக்காட்சித்திறன் ஊடாக எவ்வாறு திறன் பலகையை கையாண்டு சிறப்பாக கற்றல் பேறுகளை அடையலாம் என்பது பற்றிய அறிவுரைகளும் விருந்தினர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement