• May 01 2024

வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படமாட்டாது! - அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு

Chithra / Apr 18th 2024, 7:48 am
image

Advertisement

 

உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால் எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என இலங்கை அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போலியாக உருவாக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி, போலியான இலக்கங்கள் ஊடாக மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பெயரையும், உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியும் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அஞ்சல் திணைக்களம், தமது திணைக்களத்தினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம் ஒருபோதும் வங்கி அட்டை மற்றும் கடனட்டை தகவல்கள் கோரப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படமாட்டாது - அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு  உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால் எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என இலங்கை அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.போலியாக உருவாக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி, போலியான இலக்கங்கள் ஊடாக மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பெயரையும், உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியும் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அஞ்சல் திணைக்களம், தமது திணைக்களத்தினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம் ஒருபோதும் வங்கி அட்டை மற்றும் கடனட்டை தகவல்கள் கோரப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement