• Sep 17 2024

மட்டு பாடசாலைகளுக்குள் திடீரென புகுந்த மோப்ப நாய்களால் பரபரப்பு!

Sharmi / Dec 15th 2022, 2:40 pm
image

Advertisement

நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள தையடுத்து அதனை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (15)  புனித மைக்கேல் ஆண்கள்  தேசிய பாடசாலையில் மோப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் பையை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.பி ஹட்டியாராச்சி தலைமையில் இன்று புதன்கிழமை காலை 6.30 மணிக்கு  புனித மைக்கேல் தேசிய ஆண்கள் பாடசாலையின் வாசலில் மோப்பநாய்கள் சகிதம் பாடசாலைக்குள் உள் நுழையும் மாணவர்கள் அவர்களது பைகள் என்பவற்றை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து ஏனைய பாடசாலைகளில் இடம்பெறும் எனவும் மாணவர்கள் பெற்றோர்கள் போதை பொருள் வியாபாரிகள்; மற்றும் பாவிப்பவர்கள் தொடர்பாக அறிந்திருந்தால் உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியதருமாறும் போதை பொருள் வியாபரிகள் தொடர்பாக விழிப்பாகவும் இருக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.




மட்டு பாடசாலைகளுக்குள் திடீரென புகுந்த மோப்ப நாய்களால் பரபரப்பு நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள தையடுத்து அதனை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (15)  புனித மைக்கேல் ஆண்கள்  தேசிய பாடசாலையில் மோப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் பையை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.பி ஹட்டியாராச்சி தலைமையில் இன்று புதன்கிழமை காலை 6.30 மணிக்கு  புனித மைக்கேல் தேசிய ஆண்கள் பாடசாலையின் வாசலில் மோப்பநாய்கள் சகிதம் பாடசாலைக்குள் உள் நுழையும் மாணவர்கள் அவர்களது பைகள் என்பவற்றை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து ஏனைய பாடசாலைகளில் இடம்பெறும் எனவும் மாணவர்கள் பெற்றோர்கள் போதை பொருள் வியாபாரிகள்; மற்றும் பாவிப்பவர்கள் தொடர்பாக அறிந்திருந்தால் உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியதருமாறும் போதை பொருள் வியாபரிகள் தொடர்பாக விழிப்பாகவும் இருக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement