• Nov 25 2024

காணிப் பிரச்சினைக்கு தீர்வு - நீதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

Chithra / Feb 16th 2024, 11:59 am
image

வடக்கு கிழக்கைப் போன்றே ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் காணிப்பிரச்சினைகளைத் தீப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமையினூடாக நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

மத்தியஸ்த சபை முறைமையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் ஊடாக தற்போது வழக்குகளைத் தீர்க்கும் வீதம் 70 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

மேலும் 5 இலட்சம் ரூபா பெருமதியான வழக்கு விசாரணைகளை தீர்ப்பதற்காக மத்தியஸ்த சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் தற்போது 10 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

விசேடமாக வடக்கு கிழக்கி மாகாணங்களில் பாரியளவில் காணித் தகராறுகள இடம்பெறுகின்றன.

இந்த இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியான காணி மத்தியஸ்த சபை முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அது மிகவும் வெற்றிகரமான முறையில் செயற்படுத்தப்பட்டது.

அதனால் மேலும் 16 மாவட்டங்களுக்கு இந்த காணி மத்தியஸ்த சபை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளோம் என மேலும் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

காணிப் பிரச்சினைக்கு தீர்வு - நீதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் வடக்கு கிழக்கைப் போன்றே ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் காணிப்பிரச்சினைகளைத் தீப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமையினூடாக நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். மத்தியஸ்த சபை முறைமையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் ஊடாக தற்போது வழக்குகளைத் தீர்க்கும் வீதம் 70 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.மேலும் 5 இலட்சம் ரூபா பெருமதியான வழக்கு விசாரணைகளை தீர்ப்பதற்காக மத்தியஸ்த சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் தற்போது 10 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.விசேடமாக வடக்கு கிழக்கி மாகாணங்களில் பாரியளவில் காணித் தகராறுகள இடம்பெறுகின்றன.இந்த இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியான காணி மத்தியஸ்த சபை முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.அது மிகவும் வெற்றிகரமான முறையில் செயற்படுத்தப்பட்டது.அதனால் மேலும் 16 மாவட்டங்களுக்கு இந்த காணி மத்தியஸ்த சபை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளோம் என மேலும் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement