மெல்லிசையால் மனதை வருடும்”யாரிவள்”

323

புதிய புதிய முயற்சிகளுக்கு ஊடாக திரைத்துறை சார் படைப்புக்களை தொடர்ச்சியாக தந்து கொண்டு இருக்கும் நம்மவர்களின் படைப்புக்கள் நாளுக்கு நாள் வித்தியாசமான உச்சங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கக் கூடிய சூழலில் அண்மைய நாட்களாக பலதரப்பட்ட படைப்புக்களை நம்மால் பார்க்க கூடியதாக இருக்கின்றது.

ஒரு இளைஞன் ஒரு பெண்ணைப் பார்த்ததும், அவளிடம் அன்பாக இருப்பதும் போலவும் அவன் அந்தப் பெண்ணை தனது நண்பர்களுடன் ஒரு பாடலாக விவரிக்கிறான்.

இதனை மையக்கருவாக ”யாரிவள் ” என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
பாடலை எழுதி தானே பாடியுள்ளார் சங்கீர்த்தன். இவரின் குரல் இந்த பாடலுக்கு இன்னும் அழகு சேர்த்திருக்கின்றது என்றே சொல்லலாம் .

இந்த பாடல் யாழ்ப்பாணத்திலே படமாக்கப்பட்டுள்ளது .பாடலில் வரும் காட்சிகள் பாடலை மெருகூட்டி அழகாக்கி இருக்கின்றது.

அத்துடன் இந்த பாடலில் இளைஞர் பட்டாளமே இணைந்து இருக்கிறது .பாடலுக்கு ,ஒலி கிட்டார் ஜோனா,பாஸ் கிட்டார் – ராஜூ,டிரம்ஸ் – திஷோன் விஜயமோகன்,காஞ்சிரா – விதுரன் பிரேமகிருஷ்ணா,கலவை மற்றும் மாஸ்டரிங் – பத்மாயன் சிவானந்தன்,,வான்வழி காட்சி சபாஸ்கரன் ரத்னசிங்கம் மற்றும் ஷைராஜன், எடிட்டிங், டி ஐ மற்றும் – ஷைராஜன் ,தொழில்நுட்ப அணி – சரங்கன் என்ஜே, மகிழ்ந்தன் சிவா, நிரஞ்சன் நடராஜன் ,சிறு வடிவமைப்பு – துவரகன் கோபாலகிருஷ்ணன் இவர்களின் பணி இந்த பாடலுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

மெல்லிய இசையால் உணர்வுகளையும் அழகாக நகர்த்தி இருக்கின்றனர் ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: