• May 18 2024

வெகுவிரைவில் இராணுவ ஆட்சியின் கீழ் இலங்கை...! பெரும்பாண்மையின சட்டத்தரணி யாழில் தெரிவிப்பு...!samugammedia

Sharmi / Oct 5th 2023, 9:52 am
image

Advertisement

இலங்கையானது இராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாக முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் அமைவதாக கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணியான மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வேண்டி யாழில் நேற்றையதினம்(04)  இடம்பெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் மஹிந்த ஜெயவர்த்தன,கொழும்பை சேர்ந்த ஒரு சட்டத்தரணி , நான் இங்கு ஒரு வழக்கை வாதிடுவதற்காக வந்திருந்தேன் ,இங்கு வந்த போதுதான் எனக்கு தெரிந்தது எனது நண்பர்கள் மற்றும் சக சட்டத்தரணிகள் இங்கு ஒரு போராட்டத்தினை மேற்கொள்வதாக.அந்த வகையில் இந்த போராட்டத்தில் நான் கலந்துகொண்டு ஆதரவளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அரசாங்கம்,அல்லது இங்கு அரசாங்கத்தில் காணப்படும் தவறான தலைமைகள் திரைமறைவில் ஒரு மிகவும் தவறான காரியம் ஒண்டாய் மேற்கொண்டுள்ளனர்.இதனால் ஒரு மிகவும் நேர்மையான நீதிபதி பதவிவிலகியுள்ளார் ,அதுமட்டுமல்லாது அவர் தனது உயிர் பயத்திற்காக  நாட்டைவிட்டும் தப்பி சென்றுள்ளார்.

இது இங்கே வருத்தத்திற்குரிய விடயமாகும்.எனவே இந்த சம்பத்தின் பின்னணியில் இருப்போரை வெளிக்கொணர நாங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.

இதற்காகத்தான் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.அதில் ஒருபகுதியாகத்தான் இந்த போராட்டங்கள் கொழும்பிலும் நடைபெறுகிறது.இந்த சம்பவமானது இந்த நாடானது ராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாகவே காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்

வெகுவிரைவில் இராணுவ ஆட்சியின் கீழ் இலங்கை. பெரும்பாண்மையின சட்டத்தரணி யாழில் தெரிவிப்பு.samugammedia இலங்கையானது இராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாக முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் அமைவதாக கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணியான மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வேண்டி யாழில் நேற்றையதினம்(04)  இடம்பெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் மஹிந்த ஜெயவர்த்தன,கொழும்பை சேர்ந்த ஒரு சட்டத்தரணி , நான் இங்கு ஒரு வழக்கை வாதிடுவதற்காக வந்திருந்தேன் ,இங்கு வந்த போதுதான் எனக்கு தெரிந்தது எனது நண்பர்கள் மற்றும் சக சட்டத்தரணிகள் இங்கு ஒரு போராட்டத்தினை மேற்கொள்வதாக.அந்த வகையில் இந்த போராட்டத்தில் நான் கலந்துகொண்டு ஆதரவளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த அரசாங்கம்,அல்லது இங்கு அரசாங்கத்தில் காணப்படும் தவறான தலைமைகள் திரைமறைவில் ஒரு மிகவும் தவறான காரியம் ஒண்டாய் மேற்கொண்டுள்ளனர்.இதனால் ஒரு மிகவும் நேர்மையான நீதிபதி பதவிவிலகியுள்ளார் ,அதுமட்டுமல்லாது அவர் தனது உயிர் பயத்திற்காக  நாட்டைவிட்டும் தப்பி சென்றுள்ளார்.இது இங்கே வருத்தத்திற்குரிய விடயமாகும்.எனவே இந்த சம்பத்தின் பின்னணியில் இருப்போரை வெளிக்கொணர நாங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.இதற்காகத்தான் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.அதில் ஒருபகுதியாகத்தான் இந்த போராட்டங்கள் கொழும்பிலும் நடைபெறுகிறது.இந்த சம்பவமானது இந்த நாடானது ராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாகவே காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement