• Apr 22 2025

ஆனையிறவுக்கு படையெடுத்த தென்னிலங்கை அமைச்சர்கள்: ஆரம்பமாகவுள்ள முக்கிய செயற்பாடு..!

Sharmi / Mar 7th 2025, 4:57 pm
image

வடக்கு மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

ஆனையிறவு உப்பளத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறக்கப்படவுள்ள நிலையில் உப்பளத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இன்று ஆராயப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏனைய உப்பளமான குறிஞ்சா தீவு உப்பு பாத்தியிடும் இடம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

இவ் விஜயத்தின் போது பிரதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட பதில் செயலாளர் எஸ்.முரளிதரன், தேசிய உப்பு உற்பத்தி நிறுவன தலைவர் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




ஆனையிறவுக்கு படையெடுத்த தென்னிலங்கை அமைச்சர்கள்: ஆரம்பமாகவுள்ள முக்கிய செயற்பாடு. வடக்கு மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.ஆனையிறவு உப்பளத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறக்கப்படவுள்ள நிலையில் உப்பளத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இன்று ஆராயப்பட்டது.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏனைய உப்பளமான குறிஞ்சா தீவு உப்பு பாத்தியிடும் இடம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இவ் விஜயத்தின் போது பிரதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட பதில் செயலாளர் எஸ்.முரளிதரன், தேசிய உப்பு உற்பத்தி நிறுவன தலைவர் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement