• Apr 28 2024

பாடசாலை மாணவர்களை கண்காணிக்க சிறப்பு அதிரடிப் படையினர் களமிறக்கம்

harsha / Dec 3rd 2022, 10:58 am
image

Advertisement

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் விநியோகத்தை தடுப்பதற்கு விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

  நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்டங்களை அமுல்படுத்துவதற்காக இந்த செயலணி ஸ்தாபிக்கப்படும்.

“சிங்கப்பூர் சட்டங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உள்ளன.

 போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க சிங்கப்பூரில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற சட்டங்களை உருவாக்குவது மற்றும் முன்மொழியப்பட்ட சிறப்பு அதிரடிப்படைக்கு இதேபோன்ற அதிகாரங்களை வழங்குவது குறித்தும் நாங்கள் பார்த்து வருகிறோம்.

இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை (STF) ஏனைய கடமைகளில் இருந்து நீக்கி, போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களை கண்காணிக்க சிறப்பு அதிரடிப் படையினர் களமிறக்கம் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் விநியோகத்தை தடுப்பதற்கு விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்டங்களை அமுல்படுத்துவதற்காக இந்த செயலணி ஸ்தாபிக்கப்படும். “சிங்கப்பூர் சட்டங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உள்ளன. போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க சிங்கப்பூரில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற சட்டங்களை உருவாக்குவது மற்றும் முன்மொழியப்பட்ட சிறப்பு அதிரடிப்படைக்கு இதேபோன்ற அதிகாரங்களை வழங்குவது குறித்தும் நாங்கள் பார்த்து வருகிறோம்.இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை (STF) ஏனைய கடமைகளில் இருந்து நீக்கி, போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement