• May 07 2024

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட வசதி..! samugammedia

Chithra / May 28th 2023, 5:38 pm
image

Advertisement

நாட்டில் நாளை ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக சிசுசெரிய பஸ் சேவையை முன்னெடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

சிசுசெரிய சேவையில் ஈடுபடும் சகல பஸ் பணியாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை முடியும் வரையில், இந்த பஸ் சேவையை தொடருமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பரீட்சைகள் இடம்பெறும், அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் டெங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மாணவர்களது பரீட்சைக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என கோரியுள்ளார்.

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட வசதி. samugammedia நாட்டில் நாளை ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக சிசுசெரிய பஸ் சேவையை முன்னெடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.சிசுசெரிய சேவையில் ஈடுபடும் சகல பஸ் பணியாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.சாதாரண தரப் பரீட்சை முடியும் வரையில், இந்த பஸ் சேவையை தொடருமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.அத்தோடு, பரீட்சைகள் இடம்பெறும், அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் டெங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மாணவர்களது பரீட்சைக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement