• Jul 07 2025

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு விஸ்தரிப்பது குறித்து விசேட செயலமர்வு

Chithra / Jul 6th 2025, 2:53 pm
image

 

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு  விஸ்தரிப்பது தொடர்பான விசேட செயலமர்வு தொடரின் தென் மாகாண செயலமர்வு நேற்று  மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்க ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி,பிரதேச செயலாளர்கள் மற்றும்  ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பணியாற்றும்   துறைசார் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிநெறி  நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு அண்மையில் வட மாகாணத்தில் இந்தப் பணி தொடங்கப்பட்டது.

அதன் மூன்றாவது கட்டமாக தென் மாகாண செயலமர்வு நேற்று(05)  மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

துறைசார் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், பங்கேற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்களும்   வழங்கப்பட்டன. 


ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு விஸ்தரிப்பது குறித்து விசேட செயலமர்வு  ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு  விஸ்தரிப்பது தொடர்பான விசேட செயலமர்வு தொடரின் தென் மாகாண செயலமர்வு நேற்று  மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.ஜனாதிபதி நிதியத்திலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்க ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி,பிரதேச செயலாளர்கள் மற்றும்  ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பணியாற்றும்   துறைசார் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிநெறி  நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருவதோடு அண்மையில் வட மாகாணத்தில் இந்தப் பணி தொடங்கப்பட்டது.அதன் மூன்றாவது கட்டமாக தென் மாகாண செயலமர்வு நேற்று(05)  மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.துறைசார் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், பங்கேற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்களும்   வழங்கப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement