• Nov 25 2024

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் விசேட அறிவித்தல்!

Chithra / Oct 14th 2024, 10:15 am
image

  

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபாவிற்கு அருகில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வழங்கப்படும் அறிவுறுத்தல்களை உரியவாறு பின்பற்றுமாறு இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஹைஃபாவிற்கு தெற்கே 20 மைல் தொலைவில் அமைந்துள்ள இராணுவ தளத்தை இலக்கு வைத்து ஹெஸ்புல்லா அமைப்பினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

இதில் 4 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகச் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் விசேட அறிவித்தல்   இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபாவிற்கு அருகில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வழங்கப்படும் அறிவுறுத்தல்களை உரியவாறு பின்பற்றுமாறு இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.ஹைஃபாவிற்கு தெற்கே 20 மைல் தொலைவில் அமைந்துள்ள இராணுவ தளத்தை இலக்கு வைத்து ஹெஸ்புல்லா அமைப்பினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகச் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement