களனி ரஜமகா விகாரையில் துருத்து மஹா பெரஹெரா நடைபெறவுள்ளதையடுத்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள துருத்து மஹா பெரஹெரவுடன் இன்று தேவதூத பெரஹர வீதி வீதியாக இடம்பெறவுள்ளது.
தேவதூத பெரஹெர இன்று (21) மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வீதி உலா வரவுள்ளது.
களனி ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பேரணி பேலியகொட வீதியூடாக பலப்பிட்டிய சந்தி வரை பயணித்து கோனகம்பல வீதி ஊடாக வாரகொட வீதிக்குள் பிரவேசிக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர், வரகொடை, கல்பொரல்ல ஊடாக பயணிக்கும் ஊர்வலம், பரங்கடை சந்தியில் வலப்புறம் திரும்பி, விஹார மாவத்தையை பின்தொடர்ந்து களனி ரஜமஹா விகாரையை சென்றடையும்.
இதன்படி குறித்த காலப்பகுதியில் குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
துருத்து மகா பெரஹெரா எதிர்வரும் 24ஆம் திகதி இரவு 8.00 மணி தொடக்கம் அதிகாலை 3.00 மணி வரை வீதி உலா வரவுள்ளது.
இன்று விசேட போக்குவரத்து திட்டம். சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் களனி ரஜமகா விகாரையில் துருத்து மஹா பெரஹெரா நடைபெறவுள்ளதையடுத்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள துருத்து மஹா பெரஹெரவுடன் இன்று தேவதூத பெரஹர வீதி வீதியாக இடம்பெறவுள்ளது.தேவதூத பெரஹெர இன்று (21) மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வீதி உலா வரவுள்ளது.களனி ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பேரணி பேலியகொட வீதியூடாக பலப்பிட்டிய சந்தி வரை பயணித்து கோனகம்பல வீதி ஊடாக வாரகொட வீதிக்குள் பிரவேசிக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.அதன் பின்னர், வரகொடை, கல்பொரல்ல ஊடாக பயணிக்கும் ஊர்வலம், பரங்கடை சந்தியில் வலப்புறம் திரும்பி, விஹார மாவத்தையை பின்தொடர்ந்து களனி ரஜமஹா விகாரையை சென்றடையும்.இதன்படி குறித்த காலப்பகுதியில் குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.துருத்து மகா பெரஹெரா எதிர்வரும் 24ஆம் திகதி இரவு 8.00 மணி தொடக்கம் அதிகாலை 3.00 மணி வரை வீதி உலா வரவுள்ளது.