• May 21 2024

செலவின ஒதுக்கீடு 6 சதவீதத்தால் குறைப்பு - சுகாதாரத்துக்கு மேலதிக நிதி!

Chithra / Jan 17th 2023, 2:44 pm
image

Advertisement

2023 ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரச செலவு மதிப்பீடுகளில், மீண்டெழும் செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை 6% வீதத்தால் குறைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட நிதிச் சூழலில் அரச செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அத்தியாவசியமானதும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருமங்களுக்காக போதியளவு ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்தும் வகையிலும், 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மீண்டெழும் செலவின ஒதுக்கீடுகள் குறைக்கப்படவுள்ளன.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரியால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய, இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மீண்டெழும் செலவின ஒதுக்கீடுகளை 6 சதவீதத்தால் குறைப்பதற்கும், அதில் ஒரு சதவீதத்திற்கு சமமான ஒதுக்கீட்டை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான மேலதிக நிதியொதுக்கீடாக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

செலவின ஒதுக்கீடு 6 சதவீதத்தால் குறைப்பு - சுகாதாரத்துக்கு மேலதிக நிதி 2023 ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரச செலவு மதிப்பீடுகளில், மீண்டெழும் செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை 6% வீதத்தால் குறைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட நிதிச் சூழலில் அரச செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அத்தியாவசியமானதும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருமங்களுக்காக போதியளவு ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்தும் வகையிலும், 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மீண்டெழும் செலவின ஒதுக்கீடுகள் குறைக்கப்படவுள்ளன.கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரியால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.அதற்கமைய, இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மீண்டெழும் செலவின ஒதுக்கீடுகளை 6 சதவீதத்தால் குறைப்பதற்கும், அதில் ஒரு சதவீதத்திற்கு சமமான ஒதுக்கீட்டை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான மேலதிக நிதியொதுக்கீடாக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement