• May 08 2024

மட்டக்களப்பில் 'ஆன்மீகமும் மனிதனும்' நூல் வெளியீட்டு நிகழ்வு!SamugamMedia

Sharmi / Mar 6th 2023, 5:03 pm
image

Advertisement

பொதுச்சுகாதார பரிசோதகர் என்.தேவநேசன் எழுதிய “ஆன்மீகமும் மனிதனும்”நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் பொதுச்சுகாதார பரிசோதகர் கு.குபேரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன்,கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளிஸ்வரன் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விஞ்ஞானத்துறை பீடாதிபதி பேராசிரியர் பி.பிரதீபன்,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.சுந்தரேசன்,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.அருளானந்தம், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஆர்.நவலோஜிதன்,முன்னாள் அதிபர் கே.கனகசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மனிதனின் வாழ்க்கையில் ஆன்மீகத்தின் அவசியத்தினை வலியுறுத்தும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது.

அத்துடன் இன்றைய காலத்தில் மாணவர்கள் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் வேண்டத்தகாத செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்பதற்கு ஆன்மீகத்தினை எவ்வாறு பயன்படுத்தலாம் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவரும் சமூகசேவையாளரும் தொழிலதிபருமான சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கி நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது நூல் நயவுரைகள் ,நூல் ஆசிரியர் அறிமுகவுரைகள் உட்பட பல்வேறு ஆன்மீகவுரைகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களின் அழகிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நூலாசிரியர் கௌரவிக்கப்படவிருந்த நிலையில் அவரின் கோரிக்கைக்கு அமைவாக நூலாசிரியரின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டதுடன் நூலாசிரியரின் ஏற்புரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.


மட்டக்களப்பில் 'ஆன்மீகமும் மனிதனும்' நூல் வெளியீட்டு நிகழ்வுSamugamMedia பொதுச்சுகாதார பரிசோதகர் என்.தேவநேசன் எழுதிய “ஆன்மீகமும் மனிதனும்”நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் பொதுச்சுகாதார பரிசோதகர் கு.குபேரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன்,கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளிஸ்வரன் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்டனர்.சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விஞ்ஞானத்துறை பீடாதிபதி பேராசிரியர் பி.பிரதீபன்,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.சுந்தரேசன்,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் வைத்திய நிபுணருமான டாக்டர் கே.அருளானந்தம், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஆர்.நவலோஜிதன்,முன்னாள் அதிபர் கே.கனகசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.மனிதனின் வாழ்க்கையில் ஆன்மீகத்தின் அவசியத்தினை வலியுறுத்தும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது.அத்துடன் இன்றைய காலத்தில் மாணவர்கள் மத்தியில் காணப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் வேண்டத்தகாத செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்பதற்கு ஆன்மீகத்தினை எவ்வாறு பயன்படுத்தலாம் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவரும் சமூகசேவையாளரும் தொழிலதிபருமான சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கி நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.இதன்போது நூல் நயவுரைகள் ,நூல் ஆசிரியர் அறிமுகவுரைகள் உட்பட பல்வேறு ஆன்மீகவுரைகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களின் அழகிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.இந்த நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நூலாசிரியர் கௌரவிக்கப்படவிருந்த நிலையில் அவரின் கோரிக்கைக்கு அமைவாக நூலாசிரியரின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டதுடன் நூலாசிரியரின் ஏற்புரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement