• Oct 28 2024

தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குகின்ற சகல கட்சிகளையும் ஒருங்கிணைப்பேன்- தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறீதரன் சபதம்!

Tamil nila / Oct 27th 2024, 7:17 pm
image

Advertisement

"ஈழத் தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன்."

- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி - செல்வாநகர் வட்டாரத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எமது மக்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்கும் கட்சிகளும், அதன் தலைமைகளும் ஓரணியில் இணைய வேண்டிய காலத் தேவை எழுந்துள்ளது.


உட்கட்சி முரண்நிலைகளைத் தாண்டி இது சாத்தியமா? என்ற கேள்வி இருந்தாலும், இனத்தின் இருப்புக்காக அதனைச் சாத்தியமாக்க வேண்டிய காலக் கடமை எமக்கு தரப்பட்டுள்ளதை உணர்ந்து, கொள்கை ரீதியான உடன்பாடுகளின் அடிப்படையில் முறைமைப்படுத்தப்பட்ட இணக்க நிலையை உருவாக்கவும், அதன்வழி ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் காத்திரமான தலைமைத்துவத்தை உருவாக்கவும் தொடர்ந்தும் உழைப்பேன்." - என்றார்.


தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குகின்ற சகல கட்சிகளையும் ஒருங்கிணைப்பேன்- தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறீதரன் சபதம் "ஈழத் தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன்."- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி - செல்வாநகர் வட்டாரத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-"தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எமது மக்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்கும் கட்சிகளும், அதன் தலைமைகளும் ஓரணியில் இணைய வேண்டிய காலத் தேவை எழுந்துள்ளது.உட்கட்சி முரண்நிலைகளைத் தாண்டி இது சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இனத்தின் இருப்புக்காக அதனைச் சாத்தியமாக்க வேண்டிய காலக் கடமை எமக்கு தரப்பட்டுள்ளதை உணர்ந்து, கொள்கை ரீதியான உடன்பாடுகளின் அடிப்படையில் முறைமைப்படுத்தப்பட்ட இணக்க நிலையை உருவாக்கவும், அதன்வழி ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் காத்திரமான தலைமைத்துவத்தை உருவாக்கவும் தொடர்ந்தும் உழைப்பேன்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement