• Jan 13 2025

இலங்கையின் புதிய இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி நியமனம்

Chithra / Dec 30th 2024, 12:31 pm
image

 

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி  25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த பதவியில் தற்போது கடமையாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனின் சேவை நீடிப்பு நாளையுடன் நிறைவடைய நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு, இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட இன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் புதிய இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி நியமனம்  இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி  25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த பதவியில் தற்போது கடமையாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனின் சேவை நீடிப்பு நாளையுடன் நிறைவடைய நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் புதிய இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு, இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாகவும் பணியாற்றியுள்ளார்.மேலும், புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட இன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement