• Jan 07 2025

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் : மன்னாரிற்கு விஜயம்

Tharmini / Dec 21st 2024, 8:18 pm
image

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் இன்று (21) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தில் சிவில் சமூக செயற் பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் சிவில் சமூக செயற்பாட்டளர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு, படையினர் வசம் காணப்படும் மக்களின் காணிகள் விடுவிக்கப் படாமை, காற்றாலை மற்றும் கனிய மண் அகழ்வினால் மன்னார் தீவில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும், மன்னாரில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அவற்றை நிவர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பொலிஸாரின் தடுப்பில் வைக்கப்படும் சந்தேக நபர்களை நேரடியாக சென்று சந்திக்க கூடிய செயற்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள்  முள்ளிக்குளம் பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது முள்ளிக்குளம் பகுதியில் பல வருடங்களாக மக்களின் காணிகளில் கடற்படையினர் நிலை கொண்டுள்ளமை குறித்து ஆராய்ந்துள்ளதோடு யுத்தம் முடிவடைந்து இன்று 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கடற்படையினர் குறித்த மக்களின் காணிகளை விடுவிக்காமை குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரடியாக ஆராய்ந்துள்ளனர்

மேலும், முள்ளிக்குளம் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள், முள்ளிக்குளம் ஆலயத்திற்கு மக்கள் சென்று வருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தனர்.

குறிப்பாக முள்ளிக்குளம் மக்களின் காணிகள் , அரச கட்டுப்பாட்டில் உள்ளமை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மன்னார் தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்தும் நேரடியாக பார்வையிட்டனர்.






இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் : மன்னாரிற்கு விஜயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் இன்று (21) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தில் சிவில் சமூக செயற் பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு இடம்பெற்றது.மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் சிவில் சமூக செயற்பாட்டளர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு, படையினர் வசம் காணப்படும் மக்களின் காணிகள் விடுவிக்கப் படாமை, காற்றாலை மற்றும் கனிய மண் அகழ்வினால் மன்னார் தீவில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் கேட்டறிந்து கொண்டனர்.மேலும், மன்னாரில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அவற்றை நிவர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், பொலிஸாரின் தடுப்பில் வைக்கப்படும் சந்தேக நபர்களை நேரடியாக சென்று சந்திக்க கூடிய செயற்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள்  முள்ளிக்குளம் பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.இதன் போது முள்ளிக்குளம் பகுதியில் பல வருடங்களாக மக்களின் காணிகளில் கடற்படையினர் நிலை கொண்டுள்ளமை குறித்து ஆராய்ந்துள்ளதோடு யுத்தம் முடிவடைந்து இன்று 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கடற்படையினர் குறித்த மக்களின் காணிகளை விடுவிக்காமை குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரடியாக ஆராய்ந்துள்ளனர்மேலும், முள்ளிக்குளம் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள், முள்ளிக்குளம் ஆலயத்திற்கு மக்கள் சென்று வருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தனர்.குறிப்பாக முள்ளிக்குளம் மக்களின் காணிகள் , அரச கட்டுப்பாட்டில் உள்ளமை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து மன்னார் தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்தும் நேரடியாக பார்வையிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement