• Jan 08 2025

புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து - இளைஞர் ஸ்தலத்திலேயே பலி

Chithra / Jan 7th 2025, 7:44 am
image


புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்

புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் கருவலகஸ்வெவ 8ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் சிக்கிய மற்றுமொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்

அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துத் தொடர்பில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து - இளைஞர் ஸ்தலத்திலேயே பலி புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் சிறாம்பியடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் கருவலகஸ்வெவ 8ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தில் சிக்கிய மற்றுமொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துத் தொடர்பில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement