இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, இலங்கை முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று, இந்த சந்திப்பின்போது, இந்திய உயர் ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
இருதரப்பு உறவுகளை, குறிப்பாக இளைஞர் விவகாரத் துறையில் மேலும் வலுப்படுத்தும் இலக்கை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்திய இளைஞர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருமாறு இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சரை உயர்ஸ்தானிகர் ஜா அழைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் விளையாட்டுத்துறைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயாராகும் இந்தியா இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, இலங்கை முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று, இந்த சந்திப்பின்போது, இந்திய உயர் ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.இருதரப்பு உறவுகளை, குறிப்பாக இளைஞர் விவகாரத் துறையில் மேலும் வலுப்படுத்தும் இலக்கை அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்திய இளைஞர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருமாறு இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சரை உயர்ஸ்தானிகர் ஜா அழைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.