• Nov 25 2024

தொடரும் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை; நாட்டிற்கு வருகைதரும் இந்திய பிரதிநிதிகள்!

Chithra / Oct 28th 2024, 8:47 am
image

 

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவினர் நாளை   நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி இந்திய மீனவர்கள் நேற்றுமுன்தினமும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

தொடரும் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை; நாட்டிற்கு வருகைதரும் இந்திய பிரதிநிதிகள்  இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவினர் நாளை   நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.12 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி இந்திய மீனவர்கள் நேற்றுமுன்தினமும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement