• Nov 23 2024

இலங்கையில் ஒன்லைன் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை - அதிகரித்த முறைப்பாடுகள்

Chithra / Oct 9th 2024, 9:43 am
image


இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெற்றவையாகும்.

ஒன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20 சதவீதம் ஒன்லைன் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவையாகும்.

இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் வங்கி பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.

கடந்த காலங்களில் ஒன்லைன் வங்கிச் சேவை தொடர்பான மோசடிகள் தொடர்பான 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வங்கிகள் தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாத பலர் இவ்வாறான மோசடியில் சிக்கியுள்ளதாக கணினி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒன்லைன் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை - அதிகரித்த முறைப்பாடுகள் இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் வரை, இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெற்றவையாகும்.ஒன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20 சதவீதம் ஒன்லைன் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவையாகும்.இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் வங்கி பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.கடந்த காலங்களில் ஒன்லைன் வங்கிச் சேவை தொடர்பான மோசடிகள் தொடர்பான 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.வங்கிகள் தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாத பலர் இவ்வாறான மோசடியில் சிக்கியுள்ளதாக கணினி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement