• May 02 2024

கலைக்கப்படவுள்ள இலங்கை பாராளுமன்றம்..!ஜனாதிபதி ஆராய்வு...!காய் நகர்த்தலில் எதிர்க்கட்சிகள்...!samugammedia

Sharmi / Jun 15th 2023, 10:23 am
image

Advertisement

ஆட்சியை கொண்டு செல்வதில் நெருக்கடி  நிலைமை ஏற்படுமாக இருந்தால் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகின்றது.

அரசாங்கத்தின் பிரதான கட்சியான பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும், இதனால் ஜனாதிபதிக்கு தீர்மானங்களை எடுப்பதற்கு இடையூறுகள் ஏற்படுமாயின் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அவர் ஆராய்ந்துள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் சந்திப்பிற்கு அழைக்கப்பட்ட பொழுது பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு அதனை பகிஷ்கரித்துள்ள நிலையில் அவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதிக்கு நெருக்கடிகளை கொடுத்து ஆட்சியை கொண்டு நடத்துவதற்கு இடையூறுகளை ஏற்படுத்தலாம்  என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாக பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்காதுவிடில் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலின் மூலம் அமைக்கப்படும் தமது அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் என ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கலைக்கப்படவுள்ள இலங்கை பாராளுமன்றம்.ஜனாதிபதி ஆராய்வு.காய் நகர்த்தலில் எதிர்க்கட்சிகள்.samugammedia ஆட்சியை கொண்டு செல்வதில் நெருக்கடி  நிலைமை ஏற்படுமாக இருந்தால் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகின்றது. அரசாங்கத்தின் பிரதான கட்சியான பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும், இதனால் ஜனாதிபதிக்கு தீர்மானங்களை எடுப்பதற்கு இடையூறுகள் ஏற்படுமாயின் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அவர் ஆராய்ந்துள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் சந்திப்பிற்கு அழைக்கப்பட்ட பொழுது பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு அதனை பகிஷ்கரித்துள்ள நிலையில் அவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதிக்கு நெருக்கடிகளை கொடுத்து ஆட்சியை கொண்டு நடத்துவதற்கு இடையூறுகளை ஏற்படுத்தலாம்  என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்காதுவிடில் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலின் மூலம் அமைக்கப்படும் தமது அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தயார் என ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement