• Sep 21 2024

காணாமல் ஆக்கப்படுதல் என்ற சாதனை பட்டியலில் இலங்கை முதலிடம் - சபையில் காட்டமான எம்.பி SamugamMedia

Chithra / Mar 21st 2023, 2:35 pm
image

Advertisement

உலகத்திலே காணாமல் ஆக்கப்படுதல் அல்லது அழிக்கப்படுதல் என்ற சாதனைப்பட்டியல் வழங்கப்பட்டால் அதில் முதலாவது இடம் இலங்கை நாட்டிற்கே கிடைக்கும் என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற அவர்வில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்ற நிலையில் தற்போது தமிழர்களின் நிலங்கள், மாகாண சபைகள் என்பன தற்போது காணாமல் யோயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக பல்லாயிரக்கணகான தமிழ் மக்கள் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் கடத்தபட்டவர்கள் இன்று இல்லை என்றும் திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவர்கள் இன்று இல்லை இவ்வாறு வெள்ளைவான்களில் கடத்தப்பட்டவர்கள் இன்று இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான விரோதம் காரணமாக அரசியலமைப்பபில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமைகூட இன்று இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சிறிதரன் குறிப்பிட்டார்.

இலங்கையில் இன்று தமிழர்களுக்கான அனைத்து அதிகாரங்கள், உரிமைகள், நிலங்கள் மற்றும் சபைகள் என்பன காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற தீர்ப்புக்களை வழங்கிய நீதிபதிகள் நாடாளுமன்றத்திற்கு அழைத்து அச்சுத்தப்படுவதாகவும் இவ்வாறான அனைத்து ஜனநாயக உரிமை மீறல்களும் இலங்கையில் மட்டுமே இடம்பெறுவதாக சிறிதரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

காணாமல் ஆக்கப்படுதல் என்ற சாதனை பட்டியலில் இலங்கை முதலிடம் - சபையில் காட்டமான எம்.பி SamugamMedia உலகத்திலே காணாமல் ஆக்கப்படுதல் அல்லது அழிக்கப்படுதல் என்ற சாதனைப்பட்டியல் வழங்கப்பட்டால் அதில் முதலாவது இடம் இலங்கை நாட்டிற்கே கிடைக்கும் என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்ற அவர்வில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.இலங்கையில் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்ற நிலையில் தற்போது தமிழர்களின் நிலங்கள், மாகாண சபைகள் என்பன தற்போது காணாமல் யோயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.குறிப்பாக பல்லாயிரக்கணகான தமிழ் மக்கள் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் கடத்தபட்டவர்கள் இன்று இல்லை என்றும் திருகோணமலையில் கடத்தப்பட்ட மாணவர்கள் இன்று இல்லை இவ்வாறு வெள்ளைவான்களில் கடத்தப்பட்டவர்கள் இன்று இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான விரோதம் காரணமாக அரசியலமைப்பபில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமைகூட இன்று இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சிறிதரன் குறிப்பிட்டார்.இலங்கையில் இன்று தமிழர்களுக்கான அனைத்து அதிகாரங்கள், உரிமைகள், நிலங்கள் மற்றும் சபைகள் என்பன காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற தீர்ப்புக்களை வழங்கிய நீதிபதிகள் நாடாளுமன்றத்திற்கு அழைத்து அச்சுத்தப்படுவதாகவும் இவ்வாறான அனைத்து ஜனநாயக உரிமை மீறல்களும் இலங்கையில் மட்டுமே இடம்பெறுவதாக சிறிதரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement