• May 18 2024

அனைத்து நிதி உத்தரவாதங்களையும் இலங்கை விரைவில் பெறும் – IMF நம்பிக்கை SamugamMedia

IMF
Chithra / Feb 22nd 2023, 9:46 am
image

Advertisement

இலங்கை தனது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தும் விரைவில் நிதியுதவிக்கான உத்தரவாதங்களைப் பெறுவார்கள் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு கிடைத்தால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அனுமதி வழங்கும் என கூறியுள்ளது.

இலங்கை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடனை மறுசீரமைக்க இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளிடம் இருந்து தெளிவான மற்றும் குறிப்பிட்ட நிதி உத்தரவாதங்களை பெற்றுள்ளது.


ஆனால், இலங்கையின் மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்குநராக இருக்கும் சீனா, முழு அளவிலான நிதி உத்தரவாதம் இல்லாமல் இரண்டு வருட கால அவகாசத்தை மாத்திரம் வழங்கியுள்ளது.

ஆகவே அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை முன்னெடுத்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் என்ற வகையில், தாமும் உதவி செய்வதாகவும் ஐ.எம்.எப். இன் ஆசிய தலைவர் கிருஷ்ணா சீனிவாசன் கூறியுள்ளார்.

இதேநேரம் சீனாவின் நிதியுதவி உத்தரவாதங்கள் இல்லாமல் இலங்கைக்கு நிதியுதவியை வழங்குவது குறித்த பரிசீலனைகள் தொடர்பான செய்திகள் ஊகங்கள் என்றும் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அனைத்து நிதி உத்தரவாதங்களையும் இலங்கை விரைவில் பெறும் – IMF நம்பிக்கை SamugamMedia இலங்கை தனது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தும் விரைவில் நிதியுதவிக்கான உத்தரவாதங்களைப் பெறுவார்கள் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.அவ்வாறு கிடைத்தால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அனுமதி வழங்கும் என கூறியுள்ளது.இலங்கை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடனை மறுசீரமைக்க இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளிடம் இருந்து தெளிவான மற்றும் குறிப்பிட்ட நிதி உத்தரவாதங்களை பெற்றுள்ளது.ஆனால், இலங்கையின் மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்குநராக இருக்கும் சீனா, முழு அளவிலான நிதி உத்தரவாதம் இல்லாமல் இரண்டு வருட கால அவகாசத்தை மாத்திரம் வழங்கியுள்ளது.ஆகவே அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை முன்னெடுத்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் என்ற வகையில், தாமும் உதவி செய்வதாகவும் ஐ.எம்.எப். இன் ஆசிய தலைவர் கிருஷ்ணா சீனிவாசன் கூறியுள்ளார்.இதேநேரம் சீனாவின் நிதியுதவி உத்தரவாதங்கள் இல்லாமல் இலங்கைக்கு நிதியுதவியை வழங்குவது குறித்த பரிசீலனைகள் தொடர்பான செய்திகள் ஊகங்கள் என்றும் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement