• May 21 2024

குவைத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நடந்த கொடுமை! SamugamMedia

Chithra / Mar 13th 2023, 12:41 pm
image

Advertisement

குவைத்தில் உள்ள இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் கிடைத்துள்ளது.

குவைத்தில் சுமார் 4 வருடங்களாக வீடொன்றில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்வந்த பெண் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது இரண்டு மகன்களால்,  உடல் மற்றும் தலையில் தாக்கப்பட்டதால் தான் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். 

மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை குடியிருப்பாளர்கள் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளதுடன், வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி இதை எந்த வகையிலும் காவல்துறையினரிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர் வாகனத்தில் ஏற்றிச்சென்று ஓரிடத்தில் தன்னை கைவிட்டுச் சென்றதாகவும் தாக்குதலுக்கு உள்ளான பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரது இலங்கை நண்பர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், இது தொடர்பில் குவைத் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகமோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

குவைத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நடந்த கொடுமை SamugamMedia குவைத்தில் உள்ள இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் கிடைத்துள்ளது.குவைத்தில் சுமார் 4 வருடங்களாக வீடொன்றில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்வந்த பெண் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.அந்த வீட்டின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது இரண்டு மகன்களால்,  உடல் மற்றும் தலையில் தாக்கப்பட்டதால் தான் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை குடியிருப்பாளர்கள் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளதுடன், வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி இதை எந்த வகையிலும் காவல்துறையினரிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.பின்னர் வாகனத்தில் ஏற்றிச்சென்று ஓரிடத்தில் தன்னை கைவிட்டுச் சென்றதாகவும் தாக்குதலுக்கு உள்ளான பெண் தெரிவித்துள்ளார்.பின்னர் அவரது இலங்கை நண்பர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், இது தொடர்பில் குவைத் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகமோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement