• Apr 30 2024

காரைநகரில் ஓரங்கட்டப்பட்ட சரவணபவன்: முக்கிய நிகழ்வில் சுமந்திரன் அணி பங்கேற்பு!SamugamMedia

Sharmi / Mar 13th 2023, 12:35 pm
image

Advertisement

காரைநகரில் இலங்கை தமிழரசு கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இசை நிகழ்வு ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனிற்கு அழைப்பு விடுக்கப்படாத போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் நாள் உற்சவமாகிய நேற்று இரவு தென்னிந்திய பாடகி நித்திய ஸ்ரீ மகாதேவனின் இன்னிசை கச்சேரி மிக சிறப்பாக இடம் பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வுகள் இலங்கை தமிழரசு கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த நிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டுக்கோட்டை தொகுதி சார்ந்த அனைத்து கட்சி விடயங்களையும் மேற்கொள்ளும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருவரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

காரைநகரில் ஓரங்கட்டப்பட்ட சரவணபவன்: முக்கிய நிகழ்வில் சுமந்திரன் அணி பங்கேற்புSamugamMedia காரைநகரில் இலங்கை தமிழரசு கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இசை நிகழ்வு ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனிற்கு அழைப்பு விடுக்கப்படாத போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.வரலாற்று பிரசித்தி பெற்ற காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் நாள் உற்சவமாகிய நேற்று இரவு தென்னிந்திய பாடகி நித்திய ஸ்ரீ மகாதேவனின் இன்னிசை கச்சேரி மிக சிறப்பாக இடம் பெற்றிருந்தது.குறித்த நிகழ்வுகள் இலங்கை தமிழரசு கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் காரைநகர் பிரதேச சபை தவிசாளரின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த நிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டுக்கோட்டை தொகுதி சார்ந்த அனைத்து கட்சி விடயங்களையும் மேற்கொள்ளும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருவரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement