• Nov 25 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்..!

Chithra / Dec 26th 2023, 5:11 pm
image

 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 11.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் கடந்த வார இறுதி வரையான காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் ஜப்பானிய யெனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அதேநேரம், ஸ்ரேலிங் பவுண்ட்ஸுற்கு நிகராக 5.6 சதவீதத்தினாலும் யூரோவுக்கு நிகராக 7.8 சதவீதத்தினாலும் இந்திய ரூபாவுக்கு நிகராக 11.8 சதவீதத்தினால் குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்.  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 11.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தில் கடந்த வார இறுதி வரையான காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, குறித்த காலப்பகுதியில் ஜப்பானிய யெனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.அதேநேரம், ஸ்ரேலிங் பவுண்ட்ஸுற்கு நிகராக 5.6 சதவீதத்தினாலும் யூரோவுக்கு நிகராக 7.8 சதவீதத்தினாலும் இந்திய ரூபாவுக்கு நிகராக 11.8 சதவீதத்தினால் குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement