• Dec 05 2024

3 ஆண்டுகளுக்கு மேல் தீவொன்றில் சிக்கியிருந்த இலங்கைத் தமிழர்கள்! நடந்தது என்ன?

Chithra / Dec 3rd 2024, 3:14 pm
image

 இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள டியேகோ கார்சியா (Diego Garcia) தீவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நிர்க்கதிக்குள்ளாகியிருந்த புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் உள்ளடங்குவதாகத் தெரியவந்துள்ளது. 

இதன்படி, குறித்த இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் நிதியுதவியுடன் எதிர்வரும் 6 மாதங்கள் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

சுமார் 60 புலம்பெயர்ந்தோரைக் கொண்ட இந்தக் குழுவில் பெரும்பாலானவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டியேகோ கார்சியா தீவின் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்துள்ளனர். 

இந் நிலையிலே, குறித்த புலம்பெயர்ந்தோரின் நலன் கருதி அவர்கள் அழைத்துவரப்பட்டதாகப் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கையின் மூலம் புலம்பெயர்ந்தோரின் தொலைதூர பயணம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், இவர்கள் தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு மேல் தீவொன்றில் சிக்கியிருந்த இலங்கைத் தமிழர்கள் நடந்தது என்ன  இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள டியேகோ கார்சியா (Diego Garcia) தீவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நிர்க்கதிக்குள்ளாகியிருந்த புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் உள்ளடங்குவதாகத் தெரியவந்துள்ளது. இதன்படி, குறித்த இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் நிதியுதவியுடன் எதிர்வரும் 6 மாதங்கள் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 60 புலம்பெயர்ந்தோரைக் கொண்ட இந்தக் குழுவில் பெரும்பாலானவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டியேகோ கார்சியா தீவின் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்துள்ளனர். இந் நிலையிலே, குறித்த புலம்பெயர்ந்தோரின் நலன் கருதி அவர்கள் அழைத்துவரப்பட்டதாகப் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் புலம்பெயர்ந்தோரின் தொலைதூர பயணம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், இவர்கள் தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement