• May 18 2024

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் பொருளாதார நெருக்கடி! வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Jul 23rd 2023, 9:33 am
image

Advertisement

இலங்கை இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் எதிர்கொள்ளும் மற்றொரு பொருளாதார நெருக்கடி தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த பேராசிரியர் பெரேரா,

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நெருக்கடியின் இரண்டாம் கட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான ஒப்பந்தங்களில் குறைந்தது 39% இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, ​​இந்த வருடத்தின் முதல் காலாண்டில், இலங்கை முதலீட்டுச் சபை நிரந்தரமாக 211 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைப் பெற்றுள்ளதாக, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் பொருளாதார நெருக்கடி வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia இலங்கை இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் எதிர்கொள்ளும் மற்றொரு பொருளாதார நெருக்கடி தொடர்பில் வயம்ப பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரிவித்த பேராசிரியர் பெரேரா,சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் நெருக்கடியின் இரண்டாம் கட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான ஒப்பந்தங்களில் குறைந்தது 39% இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, ​​இந்த வருடத்தின் முதல் காலாண்டில், இலங்கை முதலீட்டுச் சபை நிரந்தரமாக 211 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைப் பெற்றுள்ளதாக, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement