• Nov 28 2024

இலங்கையின் எண்ணெய் வள பொருளாதாரமானது இஸ்ரேல் - கமாஸ் யுத்தத்திலேயே தங்கியுள்ளது - எஸ்.விஜயகுமார் தெரிவிப்பு..!samugammedia

Tharun / Jan 14th 2024, 5:49 pm
image

செங்கடலில் கப்பல்கள் மீது  கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என யாழ்.பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

செங்கடல் ஊடாக பயணம் செய்கின்ற கப்பல்கள் இலக்கு வைத்து கௌதி அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதோடு அதற்கு எதிராக UK, மற்றும் USA போன்ற நாடுகள் கௌதி அமைப்புக்கு எதிராக வான் வெளிதாக்குதல்களையும் ஏவுகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டன. அதன் காரணமாக செங்கடல் ஊடான சர்வதேச வர்த்தகத்தில் மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளதனை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த கமாஸ் இஸ்ரேல் யுத்தத்தை தொடர்ந்து எண்ணெய்  விலை சடுதியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தளவு தூரம் அந்தநேரம்  விலைகள் அதிகரிக்கவில்லை.  ஆனால்  கௌதி அமைப்புக்கு எதிராக UK, USA போன்ற நாடுகள் வான்வெளிதாக்குதல் செய்ததை தொடர்ந்து இந்த எண்ணெய்  விலைகளிலும் கச்சாய் எண்ணெய்களிலே  மெதுவான அதிகரிப்பை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

இந்த வகையிலே Brend group oil என்னும் கச்சாய் எண்ணையின் விலையானது நான்கு வீதத்தினால் அதிகரித்து ஏறத்தாள    80 சதவீதத்தினாலும் WTI மசகு எண்ணையின் விலையானது ஏறத்தாள   2.79 வீதம் அதிகரித்து இது 74.79 வீதமாகும். இன்று விலைகள் அதிகரித்திருக்கின்றன. இன்றைய நாளில் விலைகள் மாறுபடலாம். 

இந்த விலையேற்றம் என்பது முக்கியமாக பாரிய நெருக்கடியை உலக பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தக்  கூடியதாக இருக்கும்  என்று நினைக்கின்றேன். குறிப்பாக எப்பொழுதெல்லாம் எண்ணெய் வள நாடுகளிலே அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலே விலைகள் உயர்கின்றதோ அப்பொழுதெல்லாம் UK,  USA பொருளாதாரங்களில் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கி வந்திருக்கின்றன. குறிப்பாக அந்த 73, 79 ஆண்டுகளிலே கடுமையான நெருக்கடிகள் இதனால் ஏற்பட்டன. அதே போன்ற நெருக்கடிகள் இருக்க கூடும் என நான் நினைக்கின்றேன். குறிப்பாக ரிக்ஷியினூடாக பயணத்தை மேற்கொள்கின்ற ஏறத்தாள  65 வீதமான கப்பல்கள் அதிலிருந்து விலகியிருக்கின்றன. இப்பொழுது அவை ஆபிரிக்காவூடாக அல்லது வேற்று மாற்று வழிதளங்களூடாக சர்வதேச வர்த்தக பொருட்களையும்  சர்வதேச வர்த்தகத்துக்கான பொருட்களையும் எடுத்து செல்வதனையும் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. 

ஆகவே இந்த வழித்தட மாற்றத்தினூடாக இந்த பொருட்களை கொண்டு செல்வதற்கு மேலதிகமாக பத்து நாட்கள் தேவைப்படுகிறது. அது மாத்திரமல்ல இந்த எண்ணெய்  விலை ஏற்றம் காரணமாக கப்பல்களினுடைய வழித்தட மாற்றம் காரணமாக கப்பல் கட்டணம் உயர்கின்றது. குறிப்பாக ஒரு சிறிய Container ஐ கொண்டு செல்வதற்கு ஏறத்தாள  1500 dollar இதுவரை தேவைப்பட்டது என்றால், இப்பொழுது  3072 dollar தேவைப்படுகிறது. ஆகவே கப்பல் கட்டணங்கள் 2 மடங்காக இருக்கிறது. இந்த ஒட்டு மொத்த எண்ணெய் விலை அதிகரிப்பு, கப்பல் கட்டண அதிகரிப்பு காலதாமதமான  பயணங்கள், போன்றவற்றின் காரணமாக எண்ணெய்  விலைகள் சர்வதேச நாடுகளில் உயர்வதோடு குறிப்பாக மருத்துவப்பொருட்கள், Gas  உட்பட மற்றும் ஏனைய தானிய வகைகள் ஆகிய பொருட்களின் விலைகள் உயர்வதற்கான சாத்தியம் இருப்பதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. 

ஆகவே இது இலங்கை தொடர்பில் நாங்கள் பார்க்கின்ற போது, இது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கின்றது. ஏற்கனவே இலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடிகள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் எண்ணெய் விலை இன்னும் கூடுதலாக  இருந்தால் கட்டாயம் எண்ணெய் பொருளாதாரத்திலும்,  இலங்கையிலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது. அது மாத்திரமல்ல  அமெரிக்கா மற்றும் UK 

பொருளாதாரத்தில் ஏற்படும் விலை ஏற்றங்களும் அங்கிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்கின்ற பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கும். ஆகவே இறக்குமதியால் ஏற்படுகின்ற பணவீக்கமும்  இலங்கை பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்கின்றது. இது இலங்கை பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இது எதில் தங்கியிருக்கிறது என்றால், கமாஸ் -இஸ்ரேல், UK,USA , மற்றும் கௌதி அமைப்புக்களுக்கிடையிலான யுத்தம் எவ்வாறு போகப்பாகிறது என்பதை பொறுத்து இதனுடைய விளைவுகள் அமையும். இந்த யுத்தம் சிக்கலுக்குள்ளாகுமாக இருந்தால் கடுமையாக உலக பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும். அதேபோல இலங்கையும் கடுமையான உலக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கையின் எண்ணெய் வள பொருளாதாரமானது இஸ்ரேல் - கமாஸ் யுத்தத்திலேயே தங்கியுள்ளது - எஸ்.விஜயகுமார் தெரிவிப்பு.samugammedia செங்கடலில் கப்பல்கள் மீது  கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என யாழ்.பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.செங்கடல் ஊடாக பயணம் செய்கின்ற கப்பல்கள் இலக்கு வைத்து கௌதி அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதோடு அதற்கு எதிராக UK, மற்றும் USA போன்ற நாடுகள் கௌதி அமைப்புக்கு எதிராக வான் வெளிதாக்குதல்களையும் ஏவுகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டன. அதன் காரணமாக செங்கடல் ஊடான சர்வதேச வர்த்தகத்தில் மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளதனை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த கமாஸ் இஸ்ரேல் யுத்தத்தை தொடர்ந்து எண்ணெய்  விலை சடுதியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தளவு தூரம் அந்தநேரம்  விலைகள் அதிகரிக்கவில்லை.  ஆனால்  கௌதி அமைப்புக்கு எதிராக UK, USA போன்ற நாடுகள் வான்வெளிதாக்குதல் செய்ததை தொடர்ந்து இந்த எண்ணெய்  விலைகளிலும் கச்சாய் எண்ணெய்களிலே  மெதுவான அதிகரிப்பை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இந்த வகையிலே Brend group oil என்னும் கச்சாய் எண்ணையின் விலையானது நான்கு வீதத்தினால் அதிகரித்து ஏறத்தாள    80 சதவீதத்தினாலும் WTI மசகு எண்ணையின் விலையானது ஏறத்தாள   2.79 வீதம் அதிகரித்து இது 74.79 வீதமாகும். இன்று விலைகள் அதிகரித்திருக்கின்றன. இன்றைய நாளில் விலைகள் மாறுபடலாம். இந்த விலையேற்றம் என்பது முக்கியமாக பாரிய நெருக்கடியை உலக பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தக்  கூடியதாக இருக்கும்  என்று நினைக்கின்றேன். குறிப்பாக எப்பொழுதெல்லாம் எண்ணெய் வள நாடுகளிலே அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலே விலைகள் உயர்கின்றதோ அப்பொழுதெல்லாம் UK,  USA பொருளாதாரங்களில் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கி வந்திருக்கின்றன. குறிப்பாக அந்த 73, 79 ஆண்டுகளிலே கடுமையான நெருக்கடிகள் இதனால் ஏற்பட்டன. அதே போன்ற நெருக்கடிகள் இருக்க கூடும் என நான் நினைக்கின்றேன். குறிப்பாக ரிக்ஷியினூடாக பயணத்தை மேற்கொள்கின்ற ஏறத்தாள  65 வீதமான கப்பல்கள் அதிலிருந்து விலகியிருக்கின்றன. இப்பொழுது அவை ஆபிரிக்காவூடாக அல்லது வேற்று மாற்று வழிதளங்களூடாக சர்வதேச வர்த்தக பொருட்களையும்  சர்வதேச வர்த்தகத்துக்கான பொருட்களையும் எடுத்து செல்வதனையும் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. ஆகவே இந்த வழித்தட மாற்றத்தினூடாக இந்த பொருட்களை கொண்டு செல்வதற்கு மேலதிகமாக பத்து நாட்கள் தேவைப்படுகிறது. அது மாத்திரமல்ல இந்த எண்ணெய்  விலை ஏற்றம் காரணமாக கப்பல்களினுடைய வழித்தட மாற்றம் காரணமாக கப்பல் கட்டணம் உயர்கின்றது. குறிப்பாக ஒரு சிறிய Container ஐ கொண்டு செல்வதற்கு ஏறத்தாள  1500 dollar இதுவரை தேவைப்பட்டது என்றால், இப்பொழுது  3072 dollar தேவைப்படுகிறது. ஆகவே கப்பல் கட்டணங்கள் 2 மடங்காக இருக்கிறது. இந்த ஒட்டு மொத்த எண்ணெய் விலை அதிகரிப்பு, கப்பல் கட்டண அதிகரிப்பு காலதாமதமான  பயணங்கள், போன்றவற்றின் காரணமாக எண்ணெய்  விலைகள் சர்வதேச நாடுகளில் உயர்வதோடு குறிப்பாக மருத்துவப்பொருட்கள், Gas  உட்பட மற்றும் ஏனைய தானிய வகைகள் ஆகிய பொருட்களின் விலைகள் உயர்வதற்கான சாத்தியம் இருப்பதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. ஆகவே இது இலங்கை தொடர்பில் நாங்கள் பார்க்கின்ற போது, இது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கின்றது. ஏற்கனவே இலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடிகள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் எண்ணெய் விலை இன்னும் கூடுதலாக  இருந்தால் கட்டாயம் எண்ணெய் பொருளாதாரத்திலும்,  இலங்கையிலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது. அது மாத்திரமல்ல  அமெரிக்கா மற்றும் UK பொருளாதாரத்தில் ஏற்படும் விலை ஏற்றங்களும் அங்கிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்கின்ற பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கும். ஆகவே இறக்குமதியால் ஏற்படுகின்ற பணவீக்கமும்  இலங்கை பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்கின்றது. இது இலங்கை பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இது எதில் தங்கியிருக்கிறது என்றால், கமாஸ் -இஸ்ரேல், UK,USA , மற்றும் கௌதி அமைப்புக்களுக்கிடையிலான யுத்தம் எவ்வாறு போகப்பாகிறது என்பதை பொறுத்து இதனுடைய விளைவுகள் அமையும். இந்த யுத்தம் சிக்கலுக்குள்ளாகுமாக இருந்தால் கடுமையாக உலக பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும். அதேபோல இலங்கையும் கடுமையான உலக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் என அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement