• May 02 2024

பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை படைத்துள்ள சாதனை! SamugamMedia

Chithra / Mar 6th 2023, 9:17 pm
image

Advertisement

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இலங்கை ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில், ஆயிரத்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளில் 12 சதவீதமான வருவாய் தேயிலை மூலம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், தைக்கப்பட்ட ஆடை மற்றும் புடவை ஏற்றுமதி என்பன 17.74 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.

இதுதவிர இறப்பர் மற்றும் இறப்பர் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியும் 12.89 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், இலங்கை பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் 15 நாடுகளில், ஐக்கிய அரபு இராட்சியத்தை விட ஏனைய நாடுகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை படைத்துள்ள சாதனை SamugamMedia இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இலங்கை ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது.இந்தக் காலப்பகுதியில், ஆயிரத்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளில் 12 சதவீதமான வருவாய் தேயிலை மூலம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எப்படியிருப்பினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், தைக்கப்பட்ட ஆடை மற்றும் புடவை ஏற்றுமதி என்பன 17.74 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.இதுதவிர இறப்பர் மற்றும் இறப்பர் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியும் 12.89 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல், இலங்கை பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் 15 நாடுகளில், ஐக்கிய அரபு இராட்சியத்தை விட ஏனைய நாடுகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement