• May 18 2024

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானோருக்கு நினைவஞ்சலி

Chithra / Apr 21st 2024, 4:00 pm
image

Advertisement


மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியின் தொடர்புகள் குறித்து வெளியாகும் தகவல்களை அடிப்படையாக கொண்டு அவர்களை கைதுசெய்து விசாரணைசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என  தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீயோன் தேவாலயத்தில் இன்று (21)காலை உயிரிழந்தவர்களின் உறவுகள் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்.

குண்டுவெடித்த சீயோன் தேவாலயத்திற்கு வந்த உறவுகள் கண்ணீர்மல்க இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குண்டுத்தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக தாங்கள் குடும்பமாக சந்தோசமாக மகிழ்ச்சியாகயிருந்ததாகவும், இன்று அவை இல்லாமல்போயிவிட்டதாகவும் இதன்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த அஞ்சலியில் குண்டுத்தாக்குதலின்போது தனது இரண்டு கண்களையும் இழந்த சிறுமியும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியத.

கடந்த 2019 ஏப்ரல் 21ம் திகதி சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், 83 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.


மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானோருக்கு நினைவஞ்சலி மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியின் தொடர்புகள் குறித்து வெளியாகும் தகவல்களை அடிப்படையாக கொண்டு அவர்களை கைதுசெய்து விசாரணைசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என  தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சீயோன் தேவாலயத்தில் இன்று (21)காலை உயிரிழந்தவர்களின் உறவுகள் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்.குண்டுவெடித்த சீயோன் தேவாலயத்திற்கு வந்த உறவுகள் கண்ணீர்மல்க இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.குண்டுத்தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக தாங்கள் குடும்பமாக சந்தோசமாக மகிழ்ச்சியாகயிருந்ததாகவும், இன்று அவை இல்லாமல்போயிவிட்டதாகவும் இதன்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.இந்த அஞ்சலியில் குண்டுத்தாக்குதலின்போது தனது இரண்டு கண்களையும் இழந்த சிறுமியும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியத.கடந்த 2019 ஏப்ரல் 21ம் திகதி சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், 83 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement