• Mar 17 2025

வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய அரச பேருந்து; 12 பேர் காயம்!

Chithra / Mar 17th 2025, 11:40 am
image

 

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய அரச பேருந்து; 12 பேர் காயம்  சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement