பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று அபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் பொலிஸார் ,அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி இந்தியாவிடம்; கோட்டா- ஊழியர்கள் சந்திப்பு

கணவருக்கு நாய் போல சங்கிலி மாட்டி இழுத்துச் சென்ற மனைவிக்கு நேர்ந்த கதி-கனடாவில் சம்பவம்

அளவுக்கதிகமான பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: