• May 18 2024

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை..! samugammedia

Chithra / May 22nd 2023, 10:46 am
image

Advertisement

கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழக மாணவிகள் தங்கியுள்ள விடுதிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் எச்.டி கருணாரத்ன, ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் சுபசிங்க, களனி பல்கலைக்கழக உபவேந்தர் நிலாந்தி டி சில்வா ஆகியோர் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 16ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதிவரை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலசுடன்  கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இரவு ரோந்து பணியை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஜயவர்தனபுர துணைவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மாணவர்கள் போதைப்பொருள் பாவிப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அமைச்சர் வினவியபோதே பல்கலைக்கழகத்தில் ஐஸ் போதைப்பொருளை இல்லாதொழிக்க முடிந்துள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உபவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளதுடன் மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை. samugammedia கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழக மாணவிகள் தங்கியுள்ள விடுதிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் எச்.டி கருணாரத்ன, ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் சுபசிங்க, களனி பல்கலைக்கழக உபவேந்தர் நிலாந்தி டி சில்வா ஆகியோர் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்கலைக்கழகங்களில் திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதிவரை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலசுடன்  கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இரவு ரோந்து பணியை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஜயவர்தனபுர துணைவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்கள் போதைப்பொருள் பாவிப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அமைச்சர் வினவியபோதே பல்கலைக்கழகத்தில் ஐஸ் போதைப்பொருளை இல்லாதொழிக்க முடிந்துள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.களனி பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உபவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளதுடன் மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement