• Feb 21 2025

பவபருவகால சீட்டை வைத்திருப்போரை பஸ்களில் ஏற்றிச் செல்ல மறுத்தால் கடும் நடவடிக்கை!

Chithra / Feb 19th 2025, 8:34 am
image

 

மாதாந்த பவபருவகால சீட்டை  வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கியுள்ளது.

யாரேனும் ஊழியர் ஒருவர் இந்த பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாகும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பவபருவகால சீட்டை  வைத்திருப்பவர்கள் அனைவரையும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல மறுக்கும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் பருவகால சீட்டை வைத்திருப்பவர்கள், 1958 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பவபருவகால சீட்டை வைத்திருப்போரை பஸ்களில் ஏற்றிச் செல்ல மறுத்தால் கடும் நடவடிக்கை  மாதாந்த பவபருவகால சீட்டை  வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கியுள்ளது.யாரேனும் ஊழியர் ஒருவர் இந்த பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாகும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.பவபருவகால சீட்டை  வைத்திருப்பவர்கள் அனைவரையும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல மறுக்கும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் பருவகால சீட்டை வைத்திருப்பவர்கள், 1958 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement