சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான அதிபர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வளவாளர்களாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் உள வைத்திய நிபுணர் பி. டிமிது மகேந்திரா மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.மு.ஸம்ஸீத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
மேலும் அதிபர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் போதியளவிலான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2025 சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான அதிபர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.இதன்போது வளவாளர்களாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் உள வைத்திய நிபுணர் பி. டிமிது மகேந்திரா மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.மு.ஸம்ஸீத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.மேலும் அதிபர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் போதியளவிலான விளக்கங்களும் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.