• May 30 2025

உணவுக்காக ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு படுகொலை செய்யும் இஸ்ரேல்

Thansita / May 28th 2025, 7:10 pm
image

தெற்கு காஸாவில் உணவு விநியோக தளத்தை ஆயிரக்கணக்கானோர் அடைய முயன்ற நிலையில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலால் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் ஆயிரக்கணக்கான பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்கள் சர்ச்சைக்குரிய இஸ்ரேல்-அமெரிக்க அமைப்பிடமிருந்து உணவைப் பெற முயன்றனர்.

ஆனால் ஹெலிகொப்டரில் வட்டமிட்ட இஸ்ரேல் இராணுவம் உணவுக்குத் திரண்ட பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதுடன் டசின் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். 

செவ்வாய்க்கிழமை நண்பகல் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வேலிகளைத் தாண்டிச் சென்று, காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) கொண்டு வந்த உயிர்காக்கும் பொருட்களை அடைய திரண்ட கூட்டத்தின் நடுவே தள்ளப்பட்டனர்.

நாங்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறோம். சாப்பிட விரும்பும் எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் உணவளிக்க வேண்டும். வேறு என்ன செய்ய முடியும்? அவர்களுக்கு உணவளிக்க நான் எதையும் செய்ய துணிந்துவிட்டேன் என்று ஒரு பாலஸ்தீன தந்தை அல் ஜசீரா செய்தி ஊடகத்திடம் கதறியுள்ளார்.

உணவுக்கான கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தவிர, பலர் காணாமல் போயுள்ளதாகவும் காஸா அதிகாரிகள் தெரிவித்தனர். பரவலான பசி மற்றும் சிறார்கள் உட்பட பாலஸ்தீன பொதுமக்

கள் மீது இஸ்ரேல் இடைவிடாமல் நடத்தும் குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உணவுக்காக ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு படுகொலை செய்யும் இஸ்ரேல் தெற்கு காஸாவில் உணவு விநியோக தளத்தை ஆயிரக்கணக்கானோர் அடைய முயன்ற நிலையில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலால் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் ஆயிரக்கணக்கான பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்கள் சர்ச்சைக்குரிய இஸ்ரேல்-அமெரிக்க அமைப்பிடமிருந்து உணவைப் பெற முயன்றனர்.ஆனால் ஹெலிகொப்டரில் வட்டமிட்ட இஸ்ரேல் இராணுவம் உணவுக்குத் திரண்ட பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதுடன் டசின் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நண்பகல் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வேலிகளைத் தாண்டிச் சென்று, காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) கொண்டு வந்த உயிர்காக்கும் பொருட்களை அடைய திரண்ட கூட்டத்தின் நடுவே தள்ளப்பட்டனர். நாங்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறோம். சாப்பிட விரும்பும் எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் உணவளிக்க வேண்டும். வேறு என்ன செய்ய முடியும் அவர்களுக்கு உணவளிக்க நான் எதையும் செய்ய துணிந்துவிட்டேன் என்று ஒரு பாலஸ்தீன தந்தை அல் ஜசீரா செய்தி ஊடகத்திடம் கதறியுள்ளார்.உணவுக்கான கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தவிர, பலர் காணாமல் போயுள்ளதாகவும் காஸா அதிகாரிகள் தெரிவித்தனர். பரவலான பசி மற்றும் சிறார்கள் உட்பட பாலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் இடைவிடாமல் நடத்தும் குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement