• May 18 2024

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு...!samugammedia

Sharmi / Nov 24th 2023, 3:02 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம்(24) கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ந்து பாடசாலை கொடி ஏற்றி வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

சபாநாயகர் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். சபையின் முதல்வர் சூரியகாந்தன் சௌமியா நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து பிரதமர் அருளானந்தராஜா கண்ணதாசனின் உரை இடம்பெற்றதுடன்,  அமைச்சர்கள் தங்களது பிரேரணைகளை சபையில் முன்வைத்தனர்.

பின்னர் அடுத்த பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 04.03.2024 அன்று நடைபெறும் என சபாநாயகர் அறிவித்ததுடன் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறைவுற்றன.

கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சமூக விஞ்ஞான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி விக்ரர் ஜெயக்குமார் , சிறப்பு விருந்தினராக திரு, திருமதி அருணாச்சலம் சிதம்பரநாதன், கௌரவ விருந்தினராக அருளானந்தராஜா குகதாசனும்  கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், அயற்பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டன் இந்த நிகழ்வை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு.samugammedia வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம்(24) கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் இடம்பெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ந்து பாடசாலை கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.சபாநாயகர் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். சபையின் முதல்வர் சூரியகாந்தன் சௌமியா நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் அருளானந்தராஜா கண்ணதாசனின் உரை இடம்பெற்றதுடன்,  அமைச்சர்கள் தங்களது பிரேரணைகளை சபையில் முன்வைத்தனர்.பின்னர் அடுத்த பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 04.03.2024 அன்று நடைபெறும் என சபாநாயகர் அறிவித்ததுடன் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறைவுற்றன.கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சமூக விஞ்ஞான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி விக்ரர் ஜெயக்குமார் , சிறப்பு விருந்தினராக திரு, திருமதி அருணாச்சலம் சிதம்பரநாதன், கௌரவ விருந்தினராக அருளானந்தராஜா குகதாசனும்  கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், அயற்பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டன் இந்த நிகழ்வை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement