• Feb 15 2025

மூதூரில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு..!

Sharmi / Feb 15th 2025, 8:53 am
image

புலமைப் பரிசில் பரீட்சையில் மூதூர் அஷ்ரப் வித்தியாலயத்திலிருந்து வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவ,மாணவிகளையும் கற்பித்த ஆசிரியரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(14) மாலை மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

மூதூர் -அஷ்ரப் வித்தியாலய அதிபர் ஆர்.சர்ராஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நிகழ்வின் முதன்மை விருந்தினர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் அதிதிகளும், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது மாணவ மாணவிகளில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதோடு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்து சிறப்பித்தார்.

அத்தோடு தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.சப்றான், மூதூர் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் ,மூதூர் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்,மூதூர் பிரதேச சமூக அமைப்புக்களின் முக்கியஷ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



மூதூரில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு. புலமைப் பரிசில் பரீட்சையில் மூதூர் அஷ்ரப் வித்தியாலயத்திலிருந்து வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவ,மாணவிகளையும் கற்பித்த ஆசிரியரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(14) மாலை மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.மூதூர் -அஷ்ரப் வித்தியாலய அதிபர் ஆர்.சர்ராஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது நிகழ்வின் முதன்மை விருந்தினர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் அதிதிகளும், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதன்போது மாணவ மாணவிகளில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதோடு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்து சிறப்பித்தார்.அத்தோடு தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச இணைப்பாளர் எம்.சப்றான், மூதூர் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் ,மூதூர் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்,மூதூர் பிரதேச சமூக அமைப்புக்களின் முக்கியஷ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement