• Feb 15 2025

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை -பனிமூட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Thansita / Feb 15th 2025, 9:01 am
image

இன்றைய வானிலை குறித்து சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை நிலவுமென குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், 

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும்.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும்.

மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் கடல்  பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார்  வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

 இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை -பனிமூட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை இன்றைய வானிலை குறித்து சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை நிலவுமென குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும்.மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும்.மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் கடல்  பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார்  வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement