• Jan 12 2025

மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலையில் திடீர் மாற்றம்..!

Sharmi / Jan 11th 2025, 9:31 am
image

இன்று(11) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வரி உயர்வு காரணமாக மதுபானங்களின் விலை 5% முதல் 6% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், திருத்தப்பட்ட மதுபானங்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று சிலோன் டொபேக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி கேப்ஸ்டன் மற்றும் ஜோன் பிளேயர் சிகரெட்டுகளின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கும்.

அத்துடன் 83 மில்லிமீற்றர் கோல்ட் லீஃப் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 




மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலையில் திடீர் மாற்றம். இன்று(11) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வரி உயர்வு காரணமாக மதுபானங்களின் விலை 5% முதல் 6% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.எனினும், திருத்தப்பட்ட மதுபானங்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதேவேளை, வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று சிலோன் டொபேக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி கேப்ஸ்டன் மற்றும் ஜோன் பிளேயர் சிகரெட்டுகளின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கும்.அத்துடன் 83 மில்லிமீற்றர் கோல்ட் லீஃப் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement