• May 18 2024

கனடாவில் வீடுகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி!SamugamMedia

Sharmi / Feb 16th 2023, 9:21 pm
image

Advertisement

கனடாவில் வீட்டு விற்பனையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கனேடிய ரியல் எஸ்டேட் ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் இந்த ஜனவரி மாதம் வீட்டு விற்பனை 37.1 வீதமாக குறைவடைந்துள்ளது.

வீடுகளின் விலைகளும் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் கனடாவில் 20931 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இது டிசம்பர் மாத வீட்டு விற்பனையை விடவும் 3 வீதம் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வீடுகளின் சராசரி விலை 612204 டொலர்கள் என்பதுடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சராசரி விலை 749437 டொலர்களாகும்.

கனேடிய மத்திய வங்கியானது, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக எட்டு தடவைகள் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது.வீடு விற்பனைக்காக கனடாவில் பட்டியலிடப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.


கனடாவில் வீடுகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சிSamugamMedia கனடாவில் வீட்டு விற்பனையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கனேடிய ரியல் எஸ்டேட் ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் இந்த ஜனவரி மாதம் வீட்டு விற்பனை 37.1 வீதமாக குறைவடைந்துள்ளது. வீடுகளின் விலைகளும் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் கனடாவில் 20931 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இது டிசம்பர் மாத வீட்டு விற்பனையை விடவும் 3 வீதம் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வீடுகளின் சராசரி விலை 612204 டொலர்கள் என்பதுடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சராசரி விலை 749437 டொலர்களாகும். கனேடிய மத்திய வங்கியானது, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக எட்டு தடவைகள் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது.வீடு விற்பனைக்காக கனடாவில் பட்டியலிடப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement