• Sep 21 2024

சந்தையில் சீனி விலை அதிகரிப்பு: வர்த்தக திணைக்களத்திடம் அறிக்கை கோரல் ! samugammedia

Tamil nila / May 9th 2023, 10:41 pm
image

Advertisement

சந்தையில் சீனி விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்திடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலையை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சுங்க வரி காரணமாக கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் மதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது, அதேநேரம் உலக சந்தையில் கோதுமை மாவின் விலையும் 15 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் சீனி விலை அதிகரிப்பு: வர்த்தக திணைக்களத்திடம் அறிக்கை கோரல் samugammedia சந்தையில் சீனி விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்திடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனியின் விலையை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சுங்க வரி காரணமாக கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் மதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது, அதேநேரம் உலக சந்தையில் கோதுமை மாவின் விலையும் 15 சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement